சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

Apr 06, 2026,05:19 PM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


பெண் உடம்பு சரியில்லாத நாள்களிலும் வீட்டுப் பொறுப்புகளை விட்டுவிடாமல் செய்து கொண்டே இருப்பாள். அதுதான் பல குடும்பங்களில் இயல்பாகிவிட்டது. ஆனால் அந்த அமைதியான போராட்டத்தை எல்லோரும் கவனிப்பதில்லை.


அம்மா வீட்டில் இருந்தால் வேற மாதிரி.


“முகம் சரியில்லையே… உடம்பு சரியா?” என்று கேட்காமல் கூட தெரிந்துகொள்வார்கள். ஒரு கப் கஞ்சி செய்து கொடுத்து, “நீ ஓய்வு எடுத்துக்கோ” என்று அன்பாக சொல்லும் அக்கறை அங்கே இருக்கும்.


ஆனால் திருமணத்திற்கு பிறகு, கணவன் வீட்டில் பல நேரங்களில் அது மாறிப்போகிறது. உடம்பு சரியில்லை என்று சொன்னாலும் கூட, “சரி ஆயிடும்” என்ற ஒரு சாதாரண பதிலாகவே அது முடிந்து விடுகிறது. காரணம் ஒன்றே – அந்த பெண் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு செய்து கொண்டே இருப்பது.




வீட்டுப் பணி, குழந்தைகள், சமையல், குடும்ப பொறுப்புகள்… எதையும் நிறுத்தாமல் செய்து கொண்டே இருப்பதால், “இவளுக்கு உடம்பு சரியாகத்தான் இருக்கிறது” என்ற எண்ணம் பலருக்கும் உருவாகிவிடுகிறது.


ஒரு பெண்ணின் அமைதி பல நேரங்களில் அவளின் வலியை மறைத்து விடுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், அவளுக்கும் ஓய்வு வேண்டும், கவனம் வேண்டும், அக்கறை வேண்டும்.




ஒரு குடும்பம் அழகாக இயங்க வேண்டுமென்றால், அந்த வீட்டின் பெண் நலமாக இருக்க வேண்டும். அவள் சொல்லும் வார்த்தைகளை மட்டும் அல்ல, சொல்லாமல் இருக்கும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முயற்சித்தால் தான் குடும்பத்தில் உண்மையான அன்பும் புரிதலும் வளரும்.


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்