டெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து, இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய அரசு.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 28 பேர் பலியான சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, உலக நாடுகளுடன் நட்புறவுடன் செயல்பட்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இந்தியாவுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு. அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு சென்று பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து ராணுவ வீரர்கள் போல் உடைய அணிந்து இந்தியாவிற்குள் ஊடுருவி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து விரைந்து அவசர அவசரமாக இந்தியாவுக்கு வந்த அவர் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளார்.

அதன்படி, இந்தியாவிற்குள் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என கெடு விதித்துள்ளார். அதேபோல் இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தானியர்களுக்கு இனி விசாக்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்:
இந்தியாவில் சார்க் விசா பெற்று வந்துள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. அவர்களுக்கு 48 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதை எடுத்து இந்தியாவுக்கு வந்திருந்த பாகிஸ்தானியர்கள் குடும்பம் குடும்பமாக அட்டாரி- வாகா எல்லை வழியாக தங்கள் நாட்டிற்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
அதேபோல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பையும் மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.
North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்
6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Good Evening Friends... சத்தான சுவையான ராகி அடை செஞ்சு சாப்பிடலாமா?
கத்திரிக்காய் நீல கத்திரிக்காய்.. அதிலிருந்து.. சுட்ட கத்தரிக்காய் கொத்சு!
நவராத்திரி.. சோழர் காலத்தில் அரசு விழா.. நாயக்கர்கள் காலத்தில் 9 நாள் திருவிழா!
சமையல் With ஸ்வர்ணா.. முருங்கைக்கீரை தக்காளி ரசம் .. சூப்பாகவும் குடிக்கலாம்
திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!
{{comments.comment}}