-ஆ.வ.உமாதேவி
தட்டச்சு, கணினி, கைபேசி இவற்றில் ஆங்கில எழுத்துகள் மாறி மாறி வைக்கப்பட்டிருப்பது ஏன்? இதைப் பற்றி என்றாவது யோசித்துப் பார்த்துள்ளீர்களா.. வாங்க அதைப் பத்தி உங்களுக்குச் சொல்கிறோம்.
ஆரம்ப காலங்களில் பயன்படுத்தப்பட்ட தட்டச்சு எந்திரங்களில், ஆங்கில எழுத்துக்கள் அகர வரிசைப்படி வரிசையாக தான் அமைக்கப்பட்டு இருந்தது. அவ்வாறு அகர வரிசையில் வைக்கப்பட்ட போது, அடிக்கடி பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் வேக மாக தட்டப்படும் போது, அவற்றின் எந்திர பாகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிக்கலை (jamming) ஏற்படுத்தின.
இதை தவிர்க்க பொதுவாக பயன்படுத்தப்படும் எழுத்துக்களை பிரித்து, ஒன்றிலிருந்து ஒன்று விலகி இருக்கும்படி, மறு சீரமைப்பு செய்யப்பட்டது தான் இந்த "QWERTY"அமைப்பு. இது தட்டச்சு வேகத்தை குறைப்பதற்கு பதிலாக எந்திர சிக்கல்களை தவிர்த்து, வேகமாகவும் திறமையாகவும் தட்டச்சு செய்ய உதவியது.
QWERTY அமைப்பு உருவான வரலாறு:

முதலில் விசைப்பலகைகள், ஆங்கில அகர வரிசைப்படி அமைக்கப்பட்டிருந்தன. தட்டச்சு செய்பவர்கள் வேகமாக தட்டச்சு செய்யும்போது அருகருகே உள்ள எழுத்துகளுக்கான உலோக கம்பிகள் ஒன்றோடு ஒன்று மோதி எந்திரம் நின்று விட்டது.
இதை சரி செய்ய கிறிஸ்டோபர் ஷோல்ஸ் என்ற கண்டுபிடிப்பாளர், அடிக்கடி பயன்படுத்தப்படும் எழுத்துக்களை பிரித்து, சற்று வித்தியாசமான வரிசையில் அமைத்தார். இந்த மறு சீரமைக்கப்பட்ட அமைப்பின் முதல் ஆறு எழுத்துகளின் Q,W,E,R,T,Y வரிசையைக் கொண்டு இதற்கு "QWERTY"என்று பெயரிட்டனர்.
இந்த அமைப்பு தட்டச்சு வேகத்தை கூட்டி, எந்திரச் சிக்கல்களை குறைத்ததால், 1874 இல் முதல் வணிக ரீதியான வெற்றி பெற்ற தட்டச்சு எந்திரமான Remington no.2 இல் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகளாவிய தர நிலையாக நிலை பெற்றது.
இவ்வுலகில் பல விஷயங்கள் ஏதோ ஒரு காரணமாகத்தான் மாற்றம் பெற்று விளங்குகின்றன. அம்மாற்றத்திற்கான காரணங்களை அறிந்து, சரியான வழியில் மாற்றங்களை பயன்படுத்தி ஏற்றங்களை பெறுவோமாக!
தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்று சொல்வார்கள்.. இந்த கீ போர்டு கதையும் அதையே விளக்குகிறது.
(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
கரூர் வழக்கு.. டெல்லி சிபிஐ விசாரணையில் நடப்பது என்ன.. விஜய்யிடம் கேட்கப்படும் கேள்விகள் என்னென்ன?
பஞ்சமி திதியில் வரும் வசந்த பஞ்சமி.. மிக மிக சிறப்பு!
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
டைப்ரைட்டிங் கீபோர்டில்.. எழுத்துக்கள் ஏன் மாறி மாறி இருக்கு தெரியுமா?
சித்திரம் பேசுதடி (சிறுகதை)
அம்மா!
{{comments.comment}}