சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தனது முக்கியக் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ் இருந்து வருகிறது. இருப்பினும், விஜய்யுடன் ராகுல்காந்தி போன் மூலமும், பிரவீன் சக்கரவர்த்தி நேரிலும் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த காரணங்களினால், விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியில் சேர உள்ளதாக தகவல்கள் பரவியன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அதை மறுத்துவிட்டது. இந்த நிலையில், சமீபத்தில் கோவை வந்த பிரவீன் சக்கரவர்த்தி, விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்து இருக்கிறார் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் தவெக-வுக்கு 'விசில்' சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பிலிருந்து பிரவீன் சக்ரவர்த்தி தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது என பதிவிட்டுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}