வையம்!

Dec 27, 2025,12:58 PM IST

- சு.யாமினி பிரியா


உலகில் அனைத்து ஜீவராசிகளுக்கு உறைவிடமாய்!!!

உண்டு பல்கி  பெருகிட

நவதானியங்கள்!!!

எட்டு திசைகளும்  சாதனைகள் புரிந்திட!!!

வாழ்வாங்கு வாழ்பவரை புகழ்ந்திட ஸ்வரங்கள்!!!!

விருந்தினரை உபசரிக்க அறுசுவை உணவு!!!!




மனிதனுக்கு வாழ்வாதாரமாக ஐவகை நிலங்கள்!!!

வையத்தில் சிறப்புற வாழ்ந்திட வேதங்கள்!!!

மனிதன் பசியாற்றிட 

மரங்களின் முக்கனிகள்!!!

ஆணாகவும் பெண்ணாகவும் வாழ்ந்திடும் வாழ்வுதனில்!!!

அகந்தை ஒழித்து

வையம் காப்போம்!!!!


(கவிஞர் சு.யாமினி பிரியா, கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்