ஜெயிலர் 2: ரஜினிகாந்துடன் மோகன்லால் மீண்டும் இணைவாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

May 08, 2025,04:11 PM IST

சென்னை: இயக்குனர் நெல்சன், கேரளாவுக்குச் சென்று மோகன்லாலை சந்தித்ததால், ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மீண்டும் மோகன்லால் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.


ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஜெயிலர் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் மோகன்லால் மீண்டும் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

ஏனெனில் ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நெல்சன் திலீப்குமார், மோகன்லாலை கேரளாவில் சந்தித்தார். அப்போது ஜெயிலர் 2 படத்தில் நடிப்பது குறித்து இருவரும் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. 

மோகன்லால் ஏற்கனவே ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். அவர் மீண்டும் ஜெயில்ல 2 திரைப்படத்திலும் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.




அதே சமயத்தில் நடிகர் பாலகிருஷ்ணா ஜெயிலர் 2 படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். இது சும்மா கெஸ்ட் ரோல் கிடையாது. படத்தில் அவருக்கு நிறைய வேலை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது ரசிகர்களுக்கு ஒரு நல்ல சர்ப்ரைஸாக இருக்கும். 


சமீபத்தில் கன்னட நடிகர் சிவா ராஜ்குமார் ஒரு பேட்டியில் ஜெயிலர் 2 பற்றி பேசினார். அப்போது பாலகிருஷ்ணா நடிப்பது பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "பாலகிருஷ்ணா படத்தில் நடிக்கிறாரா என்று எனக்கு தெரியாது. நெல்சன் சொன்னதால் தான் நான் நடிக்கிறேன். பாலகிருஷ்ணா இருந்தால் சந்தோஷம். ஏன்னா நான் அவர்கூட இதுவரைக்கும் வேலை  செய்தது கிடையாது. கௌதமிபுத்ர சதகர்ணி படத்தில் நாங்க சேர்ந்து நடிச்சிருந்தாலும், ரெண்டு பேரும் பேசிக்கிட்டது இல்ல. ஆனா நாங்க ரொம்ப க்ளோஸ். அவர் என் அப்பாவை சித்தப்பான்னு கூப்பிடுவார்" என்று கூறினார்.


ஜெயிலர் 2 ஒரு அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக  உருவாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் இப்படத்தை எழுதி, இயக்குகிறார். கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  2023-ல் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகிறது. இதில் நடிகர் ரஜினியுடன் மீண்டும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். 

எஸ்.ஜே. சூர்யாவும் இந்த படத்தில் இணைகிறார். சிவா ராஜ்குமார் கெஸ்ட் ரோலில் வருகிறார்.


ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு வருகின்றனர். முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் ரஜினி, மோகன்லால், பாலகிருஷ்ணா, சிவா ராஜ்குமார் என பெரிய நடிகர்கள் பட்டாளமே  இருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


மேலும், ரஜினிகாந்த் ஜெயிலர் கேரக்டரில் திரும்பவும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். முதல் பாகத்தில் ரஜினியின் மாசான ஸ்டைல், ஆக்சன் காட்சிகள் பட்டைய கிளப்பின. அதேபோல் இந்த படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நெல்சன் திலீப்குமார் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர், விஜய்யை வைத்து பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜெயிலர் படம் அவருக்கு ஒரு பெரிய வெற்றியை கொடுத்தது. அதனால் ஜெயிலர் 2 படத்தையும் அவர் நல்லா இயக்குவார் என்று நம்பப்படுகிறது.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நிறைய பெரிய படங்கள் வந்துள்ளன. ஜெயிலர் படமும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜெயிலர் 2 படமும் பிரம்மாண்ட தயாரிப்பாக இருக்கும் என  எதிர்பார்க்கலாம்.

எனவே, ஜெயிலர் 2 படத்தின் இயக்கம், தயாரிப்பு, என மிகப் பெரிய அளவில் உருவாகி வரும் நிலையில், இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்டாக இருக்கும். இந்த படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15 நகரங்களை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. அதிரடியாக முறியடித்த ராணுவம்!

news

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிக்கப்பட இது தான் காரணமா?

news

Rain forecast: தமிழ்நாடு முழுவதும்.. அடுத்த சில நாட்களுக்கு மழை இருக்கு.. என்ஜாய்!

news

ஜெயிலர் 2: ரஜினிகாந்துடன் மோகன்லால் மீண்டும் இணைவாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

news

வெளுக்குது வெயிலு.. ஏசி யூஸ் பண்றீங்களா.. அப்ப இதையெல்லாம் மறக்காம பாலோ பண்ணுங்க!

news

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக.. ரோஹித் ஷர்மா திடீரென ஓய்வை அறிவித்தது ஏன்?

news

உங்களுக்கு bp இருக்கா?.. தயவு செய்து இந்த 5 உணவுகளை மறந்தும் எடுத்துக்காதீங்க!

news

ரெட்ரோ ரூ.100 கோடி வசூல்.. சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணிக்கு..அமோக வரவேற்பு..!

news

கதையல்ல நிஜம்.. வளர்ப்புத் தாயும், சைக்கிளும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்