சென்னை: மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டு அனைவருடைய கவனத்தையும் பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில்,

இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது.
கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார் என்று தெரிவித்துள்ளார்.
புரட்டாசியில் மட்டன் கோலா உருண்டையா.. அதை விட சுவையான வாழைப்பூ கோலா கட்லெட்!
அம்மி குழவியிலிருந்து தக ரடின் வரை.. ரயில் பயணங்களில்!
தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
{{comments.comment}}