- சிவ.ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி
பக்திப் பெருக்கிலும், ஆன்மிகக் கடலிலும் திளைக்க விரும்பும் அடியார் பெருமக்களுக்கு ஒரு உன்னதமான செய்தி. இந்தியாவில் முதன்முறையாக, திருமூலர் குருபீடம் மற்றும் தமிழ்நாடு திருக்கூட்ட அடியார்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஈசனின் அருளாசி பெற ஒரு பிரம்மாண்டமான சிவத்தல யாத்திரையைச் சாத்தியப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்ட சுமார் 1300 சிவ அடியார்கள், 56 வாகனங்களில் (வேன்களில்) அணிவகுத்துச் சென்று ஒரு மகத்தான ஆன்மிக சாதனையைப் படைத்துள்ளனர்.

இந்த இரண்டு நாள் பயணத்தில், பக்தி மணம் கமழும் 35 சிவத்தலங்களை அடியார்கள் தரிசித்து இறைவனடி போற்றினர்.
சாதி, மத பேதமின்றி "தென்னாடுடைய சிவனே போற்றி" எனும் முழக்கத்துடன் தமிழகத்தின் அனைத்துப் பகுதி அடியார்களும் ஒரே குடும்பமாக இணைந்து இப்பயணத்தை மேற்கொண்டது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

இவ்வளவு பிரம்மாண்டமான கூட்டத்தை எவ்வித சிரமமுமின்றி ஒருங்கிணைத்து, ஒவ்வொரு அடியாருக்கும் ஈசனின் தரிசனம் தடையின்றி கிடைக்க திருமூலர் குருபீடம் வழிவகை செய்திருந்தது.
ஒரே நேரத்தில் இத்தனை அடியார்கள் திரண்டு, குறுகிய காலத்தில் 35 ஆலயங்களைத் தரிசிப்பது என்பது இறைவனின் திருவருள் இன்றி சாத்தியமில்லை. இந்தப் பயணம் அடியார்களின் மனதில் அமைதியையும், ஆன்மிக பலத்தையும் விதைத்துள்ளது.

இந்த ஆன்மிகப் பயணம் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் வரும் காலங்களில் நடைபெறவுள்ள ஆன்மிக நிகழ்வுகளில் பங்கெடுக்க விரும்புவோர், திருமூலர் குருபீடத்தைத் (8072005360) தொடர்பு கொள்ளலாம்.
கோவை மற்றும் திருப்பூரிலிருந்து தமிழகத்தில் உள்ள சிவனடியார்கள் ஒன்றிணைந்து சுமார் ஆயிரத்து ஐநூறு சிவனடியார்கள் கலந்து கொண்டார்கள். பங்குனி மாதம் கடைஞாயிறை முன்னிட்டு முப்பத்து ஐந்து சிவாலயங்கள்
இரு தினங்களில் தரிசனம் செய்யும் வாய்ப்பு பக்தர்களுக்கு இறைவனின் திருவருளால் கிடைக்கப்
பெற்று மகிழ்ந்தார்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான திருகோட் செங்கட்ச் சோழ மன்னனரால் கட்டப்பட்ட மாடக்கோயில்களை தரிசனம் செய்வதற்கும்
இறைவனின் திருவருளை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்து தந்து அடியார்கள் மனம் மகிழ அருளிச்செய்த
சிவத்திரு தத்பருஷ தேவநாம அருள் நந்தி சிவம் ஐயா அவர்களுக்கும், சிவ. திருமதி புனிதவதி அம்மையார் அவர்களுக்கும், நிகழ்ச்சிகள் அனைத்தும் வெகு சிறப்பாக அமைவதற்கு இறை பணியில் மகிழ்ந்து மகிழ்வித்த
சிவத்திரு பாபு ஐயா அவர்களுக்கும், சிவத்திரு கேசவ மூர்த்தி ஐயா அவர்களுக்கும், அடியார்கள் அனைவரும் பாராட்டுதலையும் நன்றிகளையும் தெரிவித்தார்கள்.

ஆன்மீக பயணம் வெகு சிறப்பாக இருந்ததாகவும் ஒவ்வொரு திருத்தல த்திலும் மிக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இறைவனின் தரிசனம் கிடைத்து மகிழ்ந்தாகவும் திருத்தல வரலாற்றை ஒவ்வொரு கோயில் குருக்களும் மிகவும் சிறப்பாக எடுத்துரைத்தும் மகிழ்ந்தார்கள்.
மேலும் 54 வாகனங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு மனம் தளராமல் வாகன ஓட்டுனர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து அடியார்களுக்கு அரும்பணி செய்துள்ளார்கள். தண்ணீர் வசதிகள் மற்றும் தங்குமிடம் அனைத்தும் மிகச்சிறந்த முறையில் அமைத்து அறுசுவை உணவுகளை ஆனந்தமாக பறி மாறி இன்புற்ற காட்சி மிகவும் மனதை நெகிழச் செய்தது.
நிறைவாக RK மஹால் ஆக்கூரில் சிவத்திரு தத்பருஷ தேவநாம அருள் நந்தி சிவம் ஐயா அவர்களும் சிவ. திருமதி புனிதவதி அம்மையார் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். சிவத்திரு பாபு ஐயா அவர்களும்
உரையாற்றி ஆன்மீகப் பயணம் இறைவனின் திருவருளால் இனிதே சிறந்தது. ஆன்மீக அடியார்கள் அனைவருக்கும்
இறைவனின் திருவருளால் அனைத்து நன்மைகளும் அருளிட விழைகிறோம்.

மிகவும் சிறப்பான ஒரு ஆன்மீக பயணம்.....
இறையருளால் திருவருளும்....
திருவருளால் குருவருளும்......
கிடைத்திட உள்ளம்
மகிழ்ந்த தருணம்.....
ஆலயம் அனைத்திலும்
ஆனந்த தரிசனம்.....
ஆன்மீக பயணத்தில்
அனைத்துமே
பேரின்பம்.....
குருவருள் பெற்றதனால்

இறையருள் கிடைத்திட
எங்கும் இறைவனின்
திருநாமம்....!
அடியார்கள் திரு கூட்டம்
ஆனந்த களிப்பாட்டம்....
திருக்கோயில் அனைத்திலுமே....
ஆண்டவனின் அலங்காரம்....
பார்க்க பார்க்க பரவசமே.... !
அறுசுவை உணவுகளும்
தாகம் தணிக்க நீரும்
இறைவனின் இயக்கம்
இதயத்தில் மகிழ்ச்சி....!
சிரமங்கள் ஏதுமின்றி
குடும்ப சிந்தனைகள்
சிறிது மின்றி.....

சிவ சிவ சிவ
சிவாயநம உச்சரித்த உதடுகள்....!
கால்கள் வலித்தாலும்
கண்டு விட்டோம்
கடவுளையே.....!
நன்றி சொல்ல வார்த்தையில்லை.....
இறைபணியை
தொடர்ந்திடுவோம்.....!
தொடரட்டும் திருப்பணிகள்....
வளர்க....! வளர்க....!
சிவாயநம
திருச்சிற்றம்பலம்...!
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
{{comments.comment}}