திருப்பள்ளியெழுச்சி பாடல் 02 :
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின் மலர்த் திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக் கடிமலர் மலர
மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகடலே
பள்ளி எழுந்தருளாயே.

பொருள் :
சூரியனின் தேரோட்டியாகிய அருணன், சூரிய பகவான் உலா வரும் தேரினை இந்திரனுக்குரிய திசையாகிய கிழக்கு திசையில் நோக்கி செலுத்தி, சூரியன் கிழக்கு பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறான். இதுவரை படர்ந்து இருந்த இரவின் இருள் விலகி விட்டது. உதயமான சூரியனின் வெளிச்சம் வர துவங்கி விட்டது. சூரியன் எப்படி மெதுவாக கிழக்கில் இருந்து எழுகிறாரோ அதே போல் கருணை நிறைந்த உன்னுடைய திருமுகம் மலர்ந்து நீயும் எழுந்து கொள்ள வேண்டும். விடியல் வந்ததும் மலர்வதற்காக காத்திருக்கும் மலரில் தேன் குடிப்பதற்காக ரீங்காரம் இட்டு மொய்த்துக் கொண்டிருக்கும் வண்டுகளைப் போல், உன்னுடைய திருமுகம் மலர்ந்து அதிலிருந்து சுரக்கும் அருள் தேனை பருகுவதற்காக அடியார்கள் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. அருள் என்னும் செல்வத்தையும், மலை போல் ஆனந்தத்தையும் தருவதற்காக கடல் அலை போல் ஓயாமல் காத்துக் கொண்டிருக்கும் திருப்பெருந்துறையில் கோவில் கொண்டுள்ள சிவ பெருமானே, தூக்கம் களைந்து எழ வேண்டும்.
விளக்கம் :
இறைவனின் அழகையும், அவரின் அருள் திறத்தையும் இயற்கையோடு ஒப்பிட்டு வர்ணித்து சொல்வது ஒரு மரபு. அதன் அடிப்படையில் சிவ பெருமானின் முகத்தின் அழகை மலர்களுடனும், தேனுடனும் ஒப்பிட்டு சொல்கிறார் மாணிக்கவாசகர். சிவ பெருமானின் அக்னி வடிவமாகவும், ஜோதி பிளம்பாகவும் திகழ்பவர். அதனாலேயே இந்த பாடலில் சூரியனை உவமையாக கொண்டு பாடலை துவக்குகிறார். உண்மையான பக்தர்கள் இறைவனின் அருளை மட்டுமே வேண்டுவார்கள் என்பதை அருளையே நிதியாக தர வேண்டும் என கேட்கிறார். உலக இன்பங்களின் மேல் நாட்டம் உள்ளவர்களே பொன், பொருள் வேண்டும் என இறைவனிடம் வேண்டுவார்கள். ஆனால் சிவனின் மீது பக்தி கொண்டவர்கள் அவரின் அருளை மட்டுமே அள்ள அள்ள குறையாத செல்வமாக வேண்டும் என்றும் கேட்பார்கள். இறைவனின் கருணையே வடிவானவன் என்பதால் நிறைவான ஆனத்தத்தை மலை அளவிற்கு தருவார் என்றும் மாணிக்கவாசகர் இந்த பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}