திருப்பள்ளியெழுச்சி பாடல் 05 :
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாயெங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள் :

இயற்கை வளங்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறை தலத்தை ஆட்சி செய்து வரும் மன்னனாகிய சிவ பெருமானே! பஞ்ச பூதங்களின் வடிவமாக விளங்குபவன் நீ. பிறப்பு-இறப்பு இல்லாதவன் நீ என உன்னை அறிந்த ஞானியர்களும், புலவர்களும் பாடல்களில் உன்னை பற்றி பாடி உள்ளனர். அதைக் கேட்டும், பாடியும், ஆடியும் மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் நீ எப்படி இருப்பாய் என இதுவரை யாராவது முழுவதுமாக அறிந்திருக்கிறார்கள் என நாங்கள் இதுவரை கேள்விப்பட்டதில்லை. மனிதர்களின் சிந்தனைக்கு அற்பாட்பட்டவனே! எங்கள் முன் வந்து, எங்களுடைய பிழைகளை மன்னித்து, ஆட்கொண்டு அருள வேண்டும். உன்னுடைய அருளை வேண்டி நிற்கும் அடியார்களுக்கு அருள் வழங்குவதற்காக தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும்.
விளக்கம் :
இறைவன் எப்படிப்பட்ட உருவத்தை உடையவர், எப்படிப்பட்ட குணங்களை உடையவர் என்பதும் ஞானியர்களும், முனிவர்களும் பாடி வைத்த பாடல்களின் மூலமே அவரை அறிகிறோம். ஆனால் இறைவன் எப்படி இருப்பார்? அவருடைய உருவம் எப்படி இருக்கும் என யாரும் முழுவதுமாக அறிந்து கொண்டது கிடையாது. இறைவன் இப்படித் தான் இருப்பார் என யாராவது ஆய்வு செய்து கண்டறிய முயன்றால் அது அவர்களின் அறியாமையையே காட்டும். மனிதர்களின் சிந்தனைக்கும், கற்பனைக்கும் எட்ட முடியாதவன் இறைவன். அவன் பிறப்பும், இறப்பும் இல்லாதவன். பஞ்ச பூதங்கள் உள்ளிட்ட அனைத்து வடிவமாகவும் இறைவன் இருக்கிறார். அனைத்து இடங்களிலும் இருந்தாலும் அவர் இப்படி தான் இருப்பார் என இதுவரை எவர் ஒருவரும் கண்டது கிடையாது. இறைவனுக்கு உருவம் என்பது முக்கியமல்ல. அவர் அனைவருக்கும் சமமானவர் என்பதை இந்த பாடலில் மாணிக்கவாசகர் விளக்கி உள்ளார். நம்முடைய பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்டு, அருளைத் தான் நாம் வேண்டிப் பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
 
                                                                            SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
 
                                                                            ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
 
                                                                            ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
 
                                                                            12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
 
                                                                            பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
 
                                                                            Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
 
                                                                            நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
 
                                                                            10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
 
                                                                            காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}