திருப்பள்ளியெழுச்சி பாடல் 06 :
பப்பற வீட்டிலிருந்து உணரும் நின் அடியார் பந்தனை
வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள் :

ஒருநிலையில் இல்லாமல் எங்கெங்கோ திரிந்து கொண்டிருக்கும் மனத்தை ஒரு நிலைப்படுத்தி உன்னை சிந்திக்கும் அடியார்கள் உன்னை தரிசித்து, அருளை பெறுவதற்காக வந்திருக்கிறார்கள். அவர்கள் உலக பந்தத்தில் இருந்தும், மும்மலங்களில் இருந்தும் விடுபட முடியாமல் அந்த வினையின் பயனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் மனதை கவர்ந்து, தாங்கள் வணங்கி, அதிகம் பக்தி செய்பவர்களை தங்களுடைய கணவனாக பெற வேண்டும் என்பது எப்படி பெண்களின் இயல்போ அதே போல் உன்னை அடைய வேண்டும் என்ற ஆசையில் காத்திருக்கிறார்கள். மிக அழகான தோற்றத்துடன் பூத்திருக்கும் தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும் குளங்களாலும், வயல்களாலும் சூழப்பட்ட திருப்பெருந்துறை தலத்தில் இருக்கும் சிவபெருமானே, இந்த பிறப்பு என்னும் கயிற்றால் பிணைக்கப்பட்டிருக்கும் விடுவித்து, உன்னுடைய அடியில் சேர்த்து அருள் செய்ய வேண்டும். அதற்காக தூக்கத்தில் இருந்த எழ வேண்டும்.
விளக்கம் :
உலக உயிர்கள் அனைத்தும் பக்தி செய்து, இறைவனை அடைய வேண்டும் என ஆசையில் இருந்தாலும் காமம், குரோதம், மோகம் என்னும் மும்மலங்களாலும், பாச பந்தங்களாலும் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்து வருகிறார்கள். அதனாலேயே அவர்களால் அலை பாயும் மனதை அடக்கி, இறைவனை உணர முடியவில்லை என சாமானிய மக்களின் நிலையை விளக்குகிறார்கள் மாணிக்கவாசகர். மனதில் நினைத்தவரையே கணவராக அடைய வேண்டும் என விரும்பும் பெண்களைப் போல், உலக உயிர்களும் உன்னை அடைய வேண்டும் என்ற ஆசையில் வணங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களின் பிறவிப் பிணியை போக்கி, பந்த பாசங்கள் என்னும் மாயையில் இருந்த விலக்கி, உன்னிடம் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என சிவ பெருமானிடம் உலக உயிர்களுக்காக வேண்டிக் கொள்கிறார் மாணிக்கவாசகர்.
மனதர்கள் இறைவனை அடைய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் உலக மாயைகளில் இருந்து அவர்களால் விடுபடவும் முடியவில்லை. அதிலிருந்து விடுபடும் வழியும் அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் அவர்களை நீ தான் காப்பாற்ற வேண்டும் என சிவ பெருமானிடம் இந்த பாடல் மூலமாக கோரிக்கை வைக்கிறார் மாணிக்கவாசகர்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}