திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 - புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம்

Jan 15, 2024,08:04 AM IST

திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 :


புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவனுய்யக் கொள்கின்ற ஆறென்று நோக்கித்

திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின்

அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்

அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே

பள்ளி எழுந்தருளாயே.




பொருள் :


பூமியில் பிறக்காமல், வைகுண்டத்திலோ அல்லது பிரம்மலோகத்திலோ வாழ்வதால் நம்முடைய கர்ம வினைகள் நீங்காது. பிரம்மா, விஷ்ணு உலகத்தில் வாழ்பவர்கள். தங்களின் வினைப் பயனை அனுபவிக்க முடியுமே தவிர, அதிலிருந்து விடுபட முடியாது. சிவ பெருமானின் அருளை பெற வேண்டுமானால், இந்த பூமியில் பிறந்து, அவனை வணங்க வேண்டும். சிவனின் கருணையை பெறுவதற்காக இந்த பூமியில் வந்து பிறக்க வேண்டும் என பிரம்மாவும், திருமாலும் கூட இந்த பூமியில் வந்து பிறக்க விரும்புவார்கள். பூமியில் உள்ள அனைவரையும் ஆட்கொண்டு அருள் செய்யக் கூடியவர் திருப்பெருந்துறையில் வாழும் சிவ பெருமான் மட்டுமே. ஆகையால் எங்களுக்கு அருள் செய்ய நீ எழுந்தருள வேண்டும்.


விளக்கம் :


பூமியில் இருப்பவர்கள் வைகுண்டத்தை அடைய வேண்டும், பிரம்ம லோகத்தை அடைந்து மரணத்திற்கு பிறகும் சுகமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர, தாங்கள் செய்த வினைகளுக்கான பலன்களை அனுபவித்து கழிக்க வேண்டும். இறைவனுடன் கலந்து மறுபிறவி இல்லாத நிலையை பெற வேண்டும் என ஒருவரும் நினைப்பது கிடையாது. இதனால் இந்த பூமியில் வாழும் வாழ்க்கையை வீணாக வீணடித்துக் கொண்டிருக்கிறார். சிவனை வணங்கி, பக்தி செய்வது மட்டுமே நம்முடைய வினைகள் நீங்குவதற்கான ஒரே வழி. அவர் மட்டுமே நம்முடைய பாவ-புண்ணியங்களை நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை நமக்கு தந்து அருள கூடிய ஒரே நபர் என மாணிக்கவாசகர் இந்த பாடலில் குறிப்பிடுகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

news

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

news

மாமன் கூட நடந்து பாரு மகிழ்வுடனே தொடர்ந்து பாரு!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

news

மகளே நிறைவேற்றுவாயா?

news

அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு இனி நேரக் கட்டுப்பாடு கட்டாயம் - அமைச்சர் அருண்ராஜ்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

Short story: "அண்ணிகிட்ட சொல்லிடாதே .. கண்ணு"

அதிகம் பார்க்கும் செய்திகள்