- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 12 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 12.. கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
திருப்பாவை பாசுரம் 12 :
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திரளாய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

பொருள் :
பசியால் வாடிடும் தங்களின் கன்றுகளை நினைத்த மாத்திரத்திலேயே எருமைகள் தங்கம் மடியில் பாலை சுரக்க துவங்கி விடும். அப்படி பாலை சிந்திய படியே அவை இங்கும் அங்கும் சென்றதால் வாசல்கள் சேறாக்கி உள்ளன. இந்த அளவிற்க செழுமையாக பால் சுரக்கும் எருமைகளுக்கு சொந்தகாரனான ஆயனின் தங்கையே! கொட்டும் பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு வாலில் நாங்கள் காத்து நின்று கொண்டிருக்கிறோம். சீதையை கவர்ந்து சென்ற ராணவனின் மீது கோபம் கொண்டு அவனை அழிப்பதற்காக ராமராக அவதாரம் எடுத்த கோமகனாகிய அந்த நாராயணனின் பெருமைகளை பாடிக் கொண்டிருக்கிறோம். எங்களுடன் பேசாவிட்டாலும், அத்தகைய சிறப்பு வாய்ந்த நாராயணனை போற்றி பாடுவதற்காகவாவது வாயை திறக்க மாட்டாயா? நீயோ இன்னும் பேசாமல் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே. அனைவரும் எழுந்து விட்ட பிறகும் உனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பேருறக்கம்?
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}