- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 6 - திருவெம்பாவை பாசுரம் 6 .. மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை!
திருவெம்பாவை பாசுரம் 6 :
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

பொருள் :
மான் போன்ற இளம் பெண்ணே! நீ நேற்று, நாளை நான் வந்து உங்களை எழுப்புவேன் என்ற சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமல், அது சென்ற திசை தெரியாம இன்னும் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே! இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா? வானுலகில் இருப்பவர்களும், நிலவு உலகம், இன்னும் பிற உலங்களில் இருப்பவர்கள் எவரும் அறிவதற்கு அரிதானவனாக இருக்கும் நம்முடைய தலைவனாகிய சிவ பெருமான், தானாகவே வலிய வந்து நமக்கு அருள் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவரை நம்பி சரணடையும் பக்தர்களுக்காக தன்னுடைய நீண்ட திருவடிகளை காட்டி, இருக்கிறார்கள். அவரை பாடி, வழிபட்டு பழகிய எங்களுக்கு நீ உன் வாய் திறக்காமல் இருக்கின்றாய். சிவனை பற்றி இவ்வளவு நாங்கள் சொல்வதை கேட்டும் உன்னுடைய மனம் உருகவில்லையா? எங்களுக்க பதிலளிக்க உனக்கு மனமில்லையா? சிவனின் அருளுக்காக உருகும் எங்களுடன் வந்து சேர்ந்து நீயும் சிவனை பாடுவாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நியூ இயர் ஸ்வீட்ஸ் சாப்பிடலாம் வாங்க.. காதலரை வரவழைத்து.. பெண் செய்த விபரீதம்!
என் இனிய வருடமே 2025!
கடந்த 4 நாட்கள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு..சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
மார்கழி திருவாதிரை நாளில் நடராசரின் தாண்டவம்!
2026 வருடமே வருக!
ஏறிக் கொண்ட போகும் தங்கம் விலை.. காரணம் என்ன.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதா?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்?.. அமைச்சர்கள் - அரசு ஊழியர் சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தை
வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் (Life Is a Celebration)
Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!
{{comments.comment}}