மும்பை : சல்மான் கான் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் படமான டைகர் 3 நவம்பர் 12 ம் தேதி ஞாயிறு அன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்கிற அறிவிப்பை யஷ்ராஜ் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
டைகர் 3 படத்தில் சல்மான் கான், கத்ரினா கையிப், இம்ரான் ஹாஸ்மி, ரேவதி உள்ளிட்டோர் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஸ்பை யுனிவர்சில் ஒன்றாக இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து டைகர் 3 படத்தின் டிரைலரை ஆதித்யா சோப்ரா நேற்று வெளியிட்டார். இந்த டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டைகர் 3 படத்தின் 3 நிமிட டிரைலர் வீடியோ ரசிகர்களின் ஆர்வத்தை பல மடங்காக அதிகரிக்க செய்துள்ளது. இதில் சல்மான் கான் நாட்டையும், தனது குடும்பத்தையும் காப்பாற்றும் ரா ஏஜன்டாக நடித்திருக்கிறார். பாகிஸ்தான் ஏஜன்ட் ஜோயா என்ற கேரக்டரில் குழந்தையுடன் கத்ரினா கைஃப் நடித்துள்ளார். கபீர் கான் இயக்கி உள்ள இந்த படம் முந்தைய இரண்டு பாகங்களை விடவும் அதிரடி ஆக்ஷனிலும், பிரம்மாண்டத்திலும் கலக்கி உள்ளனர்.
தீபாவளிக்கு இந்த படத்தை திரையிடும் விதமாக யாஷ்ராஜ் பிலிம்ஸ் தனித்துவமான மற்றும் யுக்தியான சில திட்டங்களை வைத்திருக்கிறது. 2023 என்பது 'ஆதிக் மாஸ்' வருடம் என்பதால் பண்டிகை நிறைந்துள்ளன. நவம்பர் 13 புதிய சந்திரன் மற்றும் அமாவாசை நாள். நவம்பர் 14 கோவர்தன் பூஜையுடன் சேர்த்து குஜராத்தியின் புது வருடமாகவும் அமைகிறது. நவம்பர் 15ல் பாய் தூஜ் என இவையெல்லாம் வருவதால் விடுமுறைகள் அதிகம் இருக்கும்.
விடுமுறை நாட்களில் அதிகம் வருவதினால் இப்படம் வசூலை வாரி குவிக்கும் என்றும் , இப்படம் வசூலில் சாதனை புரியும் என்றும் எண்ணியே பண்டிகை நாட்களில் வெளியிடப்படுகிறது.
உலகம் முழுவதிலும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. முன்னர் வந்த டைகர் படங்களை விட இப்படம் வசூலில் சாதனை புரியும் என்பதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பஹல்கம் தீவிரவாத தாக்குதல்.. பிரதமர் மோடியுடன் அதிபர் புடின் பேச்சு.. இந்தியாவுக்கு ஆதரவு!
சபரிமலை செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு.. ஐயப்பனை தரிசிக்கப்போகும் முதல் ஜனாதிபதி!
செனாப் நதியின் 2 அணைகளிலிருந்து.. பாகிஸ்தான் செல்லும் தண்ணீரை.. நிறுத்தி வைத்தது இந்தியா
Gold rate: தங்கம் விலை ஸ்திரமற்றதாக இருக்கும்.. முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கவும்..!
குளத்தில் வட்ட இலையுடன் தாமரை மலரும்.. ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்: தமிழிசை சௌந்தரராஜன்
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. காயத்தால் அவதிப்படும் பும்ரா.. புது வைஸ் கேப்டனாக வரப் போவது யாரு?
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறைகளைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்?.. பாதுகாப்பு அதிகரிப்பு!
வேற லெவல் சாட்ஜிபிடி.. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி.. ஏ+ மார்க் வாங்கி அசத்திய ஆய்வு மாணவர்!
Cheating case: 78 வயது மூதாட்டியிடம் மோசடி.. 21 வயது இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது!