திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு... மகாதீபம் ஏற்றுவதில் சிக்கல் வருமா?.. குழப்பத்தில் பக்தர்கள்

Dec 07, 2024,05:09 PM IST

திருவண்ணமலை : திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த வருடம் அண்ணாமலையார் மலை மீது செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பதை தாண்டி, மகாதீபம் ஏற்றுவதிலேயே சிக்கல் ஏற்பட்டு விடுமோ என அண்ணாமலையார் பக்தர்கள் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.


சமீபத்தில் வங்கடலில் உருவான பெஞ்சல் புயல், அதன் விளைவாக பெய்த கனமழையால் திருவண்ணாமலையில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்ததால், 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் ராட்சத பாறை மற்றும் மண்சரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட சோகத்தில் இருந்தும், அதிர்ச்சியில் இருந்தும் அப்பகுதி மக்கள் இன்னும் முழுவதுமாக மீண்டு வரவில்லை. 




இந்நிலையில் 2024ம் ஆண்டிற்கான திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக டிசம்பர் 04ம் தேதி அண்ணாமலையார் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 13ம் தேதி திருக்கார்த்திகை அன்று அண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த மகாதீபத்தை தரிசிப்பதற்காக மலையேறி செல்ல 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் மண்சரிவு ஏற்பட்டு சில நாட்களே ஆவதால் திருக்கார்த்திகை அன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா? அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுமா? என்ற குழப்பம் பக்தர்களிடம் ஏற்பட்டிருந்தது.


இந்த நிலையில் இன்று (டிசம்பர் 07) திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றுவதற்காக கொப்பரை எடுத்துச் செல்லும் பாதையில் 100 மீட்டர் அளவிற்கும், மலை மீது கொப்பரை வைக்கும் இடத்தில் 800 மீட்டர் அளவிற்கும் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பாறைகள் உறுதியற்ற நிலையில், பலவீனமாக இருப்பதாகவும், மலையில் பல இடங்களில் புதைகுழிகள் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மகாதீப கொப்பறை வைக்கும் இடத்திலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், மகாதீபம் ஏற்றுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் பக்தர்களிடம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் என்ன முடிவு எடுக்கப் போகிறதோ என பதற்றம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?

news

ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?

news

மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!

news

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா

news

10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்

news

10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!

news

10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!

news

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931

news

The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்