திருப்பதி கோவில் லட்டு சர்ச்சை.. கோவில் முழுவதும் புனித நீர் தெளித்து சிறப்பு பரிகார பூஜை

Sep 23, 2024,06:15 PM IST

திருப்பதி: திருப்பதியில் வழங்கப்பட்ட லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு அதன் புனிதத்திற்கு களங்கம் ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் இதனைப் போக்க கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டது.

ஆந்திராவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வழங்கப்படும் லட்டுவை பக்தர்கள் புனித பிரசாதமாக  கருதுகின்றனர். ஆனால் அங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



கடந்த ஜூலை 17ஆம் தேதி குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு துறை அலுவலகத்தில் திருப்பதி லட்டு  சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.அப்போது அதில் நெய்க்கு பதிலாக மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்திற்கு களங்கம் விளைவித்து விட்டதாக பக்தர்கள் குமுறி வருகின்றனர்.

இதற்கிடையே ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சிறப்பு பூஜை செய்து பரிகார விரதம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக குண்டூர் தசாவதார பெருமாள் கோயிலில் விரதத்தை தொடங்கிய அவர், அரசை குறைக்கூறவோ அரசியல் ஆதாயத்திற்காகவோ விரதம் இருக்கவில்லை. கலப்படம் குறித்து அமைச்சரவையிலும் சட்டப் பேரவையிலும் விவாதிக்க வேண்டும் எனவும், மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இதுகுறித்துக் கூறுகையில், ஏழுமலையான் விஷயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் கண்டிப்பாக சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். ஏழுமலையான் விஷயத்தில் நான் பலமுறை யோசிப்பேன். நாங்கள் ஒருபோதும் தவறிழைக்க மாட்டோம். ஜெகன்மோகன் ஆட்சியின் அலட்சியத்தால் பல பக்தர்களின் மனம் புண்பட்டு இருக்கிறது. அதில் நானும் ஒருவன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது திருப்பதி கோவிலின் புனிதத்திற்கு களங்கம் ஏற்பட்ட நிலையில் அதனைப் போக்க ஆகம விதிகளின்படி என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தேவஸ்தானம் சார்பில், நிர்வாக அதிகாரி சாமளாராவ் தலைமையில்  சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான அர்ச்சகர்கள், உயர் அதிகாரிகள், சாஸ்திர ஆலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலை தூய்மைப்படுத்தி புனித நீர் தெளிக்கப்பட்டு மூன்று நாட்கள் யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதனை  தொடர்ந்து கோவில் ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் ஆகியோர்கள் இணைந்து மகா சாந்தி யாகம், சாந்தியாகும் மகா சம்ராக்ஷண யாகம் நடத்தி வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்