சென்னை : திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாள் அன்று மலையேறி சென்று மகாதீபத்தை தரிசிப்பதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 04ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று (டிசம்பர் 10) நடைபெற்றது. விழாவின் உச்ச நிகழ்வான திருக்கார்த்திகை தீபத்தன்று அதிகாலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், மாலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ந்து 3 நாட்கள் வரை எரியும். சுற்றியுள்ள 20 கி.மீ., தூரத்திற்கு இந்த தீபத்தை மக்கள் தரிசனம் செய்ய முடியும்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் திருவண்ணாமலையில் நடைபெற்று வந்தது. பரணி தீபத்தை காண 7500 பேருக்கும், மகா தீபத்தை தரிசிக்க மலையேறி செல்ல 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக நவம்பர் மாதம் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், டிசம்பர் 01ம் தேதியன்று திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் அண்ணாமலையார் மலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக பலியாகினர். இதைத் தொடர்ந்து மலையில் பல இடங்களிலும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த முறை மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா? மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இது தொடர்பாக நேற்று சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கண்டிப்பாக திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் என்றார். இதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் தன்று மலை மீது தீபம் ஏற்றப்படும். ஆனால் பக்தர்கள் மலை மீது செல்ல அனுமதி கிடையாது. ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதிகமானவர்களை மலையில் ஏற்றுவது சரி அல்ல என அறிக்கை அளிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் கோவில் வளாகத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை காண 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கோவில் நிர்வாகிகள் மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபம் ஏற்றுவதற்கான திரி அடங்கிய கொப்பரை, நெய் ஆகியவை மலை உச்சிக்கு எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் 35 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மனிதா நீ மட்டும் ஏன் இன்னும் களிமண்ணாய்..!
பொம்மிக்குட்டி.. ஒரு நிமிடக் கதை (23)
விரதம் என்னும் பயிற்சி
அன்பான “கூகுள் டிரான்ஸ்லேட் குடும்பத்தினர்” மற்றும் ஜூனூன் தமிழ் ரசிகர்களே!
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளி - சிவபுராணம் (தொடர்ச்சி)
சமையல் With ஸ்வர்ணா: கருப்பு உளுந்து (Black urad dal ) + மல்லி சட்னி!
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்.. புரிந்து கொள்ளவும், ஒன்றிணைக்கவும் உதவும் பாலம்!
மகா கந்த சஷ்டி விரதம் 2026: முருகனே செந்தில் முதல்வனே.. மாயோன் மருகனே!
கடல் ஒரு கவிதை!
{{comments.comment}}