சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தலைவர் 171. இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியானது. கூலி என்று பெயரிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
தமிழ் சினிமாவிற்குள் கடந்த 2017ம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக நுழைந்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என்று பல வெற்றி படங்களை கொடுத்தவர். இப்படங்களை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிக்கும் படம் தலைவர் 171. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ரன்பீர் சிங், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவருகின்றன. இந்த படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவன அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
டைட்டில் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. தங்கம், தங்க மகன் என்று பலரும் கற்பனை சிறகை தட்டி விட்டு வந்தனர். இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத தலைப்புடன் வந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கூலி என்று இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் டைட்டில் வைத்துள்ளார்.
அமிதாப் பச்சனின் கூலி: கூலி என்ற தலைப்புக்கும் ரஜினிக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. 1983ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் கூலி. இப்படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் அமிதாப் பச்சனுக்கு வயிற்றில் அடிபட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்தப் படத்தை தீ என்ற பெயரில் தமிழில் தயாரித்தனர். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தும், சுமனும் இணைந்து நடித்தனர். சுமன், ரஜினியின் தம்பியாக நடித்திருப்பார்.
ரஜினி கையில் பேட்ஜ்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த் துறைமுகத்தில் கூலி வேலை பார்க்கும் தொழிலாளியாக நடித்திருப்பார். அவரது கையில் 786 என்ற பேட்ஜ் அணிந்திருப்பார். அப்போது அது பிரபலமானது. இத்தனை காலத்திற்குப் பிறகு இப்போது மீண்டும் கூலி என்ற டைட்டில் ரஜினிகாந்த் வசம் வந்துள்ளது.
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்: மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் பேசி பிரபலமான அப்பாவும், தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது. இதை பாடல் வரியாக நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினிகாந்த் எம்.எஸ்.வி. குரலில் ரஜினிக்காக பாடியிருப்பார். பின்னர் ஒரு படத்தில் இதை தனது சித்தாந்தமாக ரஜினியே வசனம் பேசி நடித்தும் இருப்பார். இப்போது அதே வசனம் மீண்டும் இப்படத்தில் திரும்பி வந்துள்ளது.
தங்கமகன் பாடல்: அதேபோல இன்னொரு விசேஷத்தையும் சேர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் டிஐஎஸ்சிஓ டிஸ்கோ டிஸ்கோ என்ற சூப்பர் ஹிட் பாடல் இடம் பெற்றிருக்கும். அந்தப் பாடலின் வரியையும் தீம் மியூசிக்கில் கோர்த்துள்ளார் அனிருத். இதுவும் ரஜினி ரசிகர்களை குறிப்பாக அந்தக் காலத்து ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துள்ளது. ரஜினியின் பல முக்கிய அடையாளங்களை இந்தப் படத்தில் மொத்தமாக பார்க்கும் வாய்ப்பை ஒரு பேக்கேஜ் போல லோகேஷ் கொடுத்திருக்கலாம் என்ற பரவசமும் ஏற்பட்டுள்ளது.
கூலி படம்.. ரஜினியின் கெரியரில் மிகப் பெரிய ஹிட்டாக அமையும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}