12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 15, 2025... இன்று உதவிகள் தேடி வரும்

Dec 15, 2025,09:55 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், கார்த்திகை 29ம் தேதி திங்கட்கிழமை

ஏகாதசி. சுபமுகூர்த்தம். சர்வதேச தேயிலை தினம். இன்று இரவு 11.43 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. பகல் 02.09 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று பகல் 02.09 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 09.15 முதல் 10.15 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, பணியிடத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். உங்கள் மனைவியின் கருத்துக்களை பொறுமையுடன் கேளுங்கள். வாகன செலவுகள் அதிகரிக்கலாம். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் கிரே.


ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு, பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவீர்கள். வருமானம் உயரும். வசதிகளும் வாய்ப்புகளும் பெருகும். உடல் நலம் சீரடையும். மாணவர்களின் கவனக்குறைவு நீங்கும். உறவினர்கள் உங்கள் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுவார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் கடல்நீலம்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். அவசரத் தேவைகளுக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். கலைத் துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இது ஏற்றமான காலம். ஆன்மீக செலவுகளுக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு, மார்க்கெட்டிங் துறையில் ஆர்டர்கள் அதிகரிக்கும். தேவையற்ற மன பயம் விலகும். திருமணம் சிறப்பாக நடக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். பணியிடத்தில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் வெளிநாடு செல்வார்கள். வியாபாரத்தில் வரவு செலவு அதிகரிக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, விசா கிடைத்து வெளிநாடு செல்வீர்கள். அலுவலகத்தில் வேலைப்பளு சற்று அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். பெண்களுக்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் கடல்நீலம்.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு, பிள்ளைகள் நன்றாகப் படிப்பார்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். காய்கறி வியாபாரிகள் பயனடைவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். தம்பதியரிடையே வாக்குவாதங்கள் வரலாம். அமைதியைக் கடைப்பிடித்தால் தவிர்க்கலாம். உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். யாருக்கும் உறுதிமொழி கொடுக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் நலம் விசாரிப்பார்கள். சேமிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை. உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு, உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் இடமாற்றம் ஏற்படலாம். பயணங்களின் போது கவனம் தேவை. வியாபாரம் சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்களை வெறுத்துச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உடல் நலம் தேறும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு, வீடு, மனை உங்கள் விருப்பத்திற்கேற்ப அமையும். நட்பு வட்டம் விரிவடையும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். சிலருக்கு புதிய இடத்தில் வேலை கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. நம்பிக்கைக்குரியவரை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு, இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொதுவாக இன்று அமைதி காப்பது நல்லது. இறைவனை வழிபடுவதால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அரசியலில் ஆர்வம் கூடும். முகத்தில் பொலிவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் மதிப்பார்கள். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!

news

என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?

news

உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!

news

சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்

news

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த பாகிஸ்தானி அப்பா மகன்.. 16 பேரின் உயிரைப் பறித்த கொடுமை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 15, 2025... இன்று உதவிகள் தேடி வரும்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்