தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், மார்கழி 04ம் தேதி வெள்ளிக்கிழமை
அனுமன் ஜெயந்தி, அமாவாசை. இன்று காலை 05.56 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. இன்று முழுவதும் கேட்டை நட்சத்திரம் உள்ளது. இன்று காலை 06.23 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
சந்திராஷ்டமம் - பரணி

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால், யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம். இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. இன்று பல காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால், புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது சிறந்தது. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களில் இருந்து பணவரவு உண்டு. பிள்ளைகள் சொல் பேச்சு கேட்பார்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். உடன்பிறந்தவர்களுடன் இணக்கமான உறவு நீடிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் கேட்ட கடனுதவி கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கணவரின் அன்பில் திளைப்பீர்கள். உடல் நலமும் தேறும். அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு பெண்களுக்கு நன்மை உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். பண நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும். மனம் அமைதி அடையும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு வேற்று மதத்தவர் உங்களுக்கு உதவுவார். கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். நவீன தொழில்நுட்பங்களை உங்கள் தொழிலில் புகுத்துவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் அடைவீர்கள். தாய் வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு வாராக் கடனாக இருந்த பணம் வந்து சேரும். வெளி நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகள் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. உணவில் கட்டுப்பாடு அவசியம். தேவையற்ற செலவுகளைக் குறைப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் புரிதல் அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் கடையை விளம்பரங்கள் மூலம் மக்களிடையே பிரபலப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் நிலவும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குச்சந்தை உங்களுக்கு லாபம் தரும். வேலையாட்களிடம் அன்பாகப் பேசி வேலை வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட நிறம் நீலம்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். உங்களுக்கு மரியாதை கூடும். வெளி வட்டாரத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். உறவினர்கள் உங்களை வந்து சந்திப்பார்கள். வாகனங்களுக்கு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம் கிளிப்பச்சை.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் வெளியூர் செல்வார்கள். இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த உத்யோக சம்பந்தமான முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். உங்கள் மகளுக்கு நல்ல வரன் அமையும். விற்பனையாளர்களுக்கு விற்பனை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு பெண்கள் பகுதி நேரமாக வேலை செய்வார்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீட்டினை அழகுபடுத்துவதற்காக பொருட்களை வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைவாக முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம் ஊதா.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு உங்கள் நிர்வாகத் திறனும், பேச்சுத் திறனும் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தொழில் மந்தம் நீங்கும். கணவரின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பது நல்லது. உங்களுக்கு பொறுப்புகள் தேடி வரும். உடல் உபாதைகள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு வெளியூர் செல்வதற்கான திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். விளையாட்டுத் துறையில் வெற்றிகள் குவியும். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். கடவுள் நம்பிக்கை வலுப்பெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவார்கள். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். பெரிய காரியங்கள் விரைவாக முடியும். அதிர்ஷ்ட நிறம் நீலம்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். பிள்ளைகளுக்கு உங்கள் மீது மரியாதை கூடும். வீடு, வாகனத்தை சரி செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம்.
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!
கண்ணாடியே.. நான் வந்து நிற்கிறேன் உன் முன்னாடியே.. CONVERSATION WITH THE MIRROR!!
துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்...பொங்கல் பண்டிகை முதல் துவக்கம்
சற்று குறைந்தது தங்கம் விலை... தங்கம் மட்டும் இல்லங்க வெள்ளியும் இன்று குறைவு தான்!
மார்கழிப் பூவே.. மார்கழிப் பூவே.. The Significance of Marghazhi!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 19, 2025... இன்று அனுமன் ஜெயந்தி 2025
மார்கழி 04ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 04 வரிகள்
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}