- ரேணுகா ராயன்
சூரிய குடும்பத்தில் தாய் எனும் தனி பெருமையோடு வலம் வந்து கொண்டிருக்கும் ஒரே கோள்... 84 லட்சம் வகை உயிரினங்களை பல கல்ப காலமாக தாங்கி சுமந்து சுழலும் அந்த ஒற்றை கோள்தான் நம் கண் கண்ட தெய்வம் ... அவளே பூமித்தாய்.
குறைகளின்றி நம்மை நிறைவாய் வாழவைத்த அவளை அழித்துக் கொண்டே சுக வாழ்வு வாழ்கிறோம் எனும் குற்ற உணர்வு இன்றி களிப்போடு இருக்கிறோம் என்பதே வேதனையான உண்மை.
மின் தேவைக்காக சுரங்கம் வெட்டியும் எரிபொருள் ஆற்றல் பெற எண்ணெய் கிணறுகளை தோண்டியும் அவளை அழிக்க நாம் துணிந்து பல காலம் ஆகிவிட்டது.
ஆனால் இப்போது நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் நாம் கொடுக்கப்போகும் விலை உயிர் பலியாகவே இருக்கும். மனித வளம் பெருக்க இயற்கை வளங்களை அழித்த மூடத்தனத்தை விட்டொழிக்க வேண்டிய கடைசி தருணத்தில் உள்ளோம்.
அதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் இன்று புவி தினம் அனுசரிக்கப்படுகிறது. "நமது சக்தி; நமது கோள்" என்ற நோக்கோடு இவ்வாண்டு புவி தினத்தை விழிப்புணர்வு தினமாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
கண் முன்னே கை அருகில் உள்ள மாற்று வாய்ப்பாகவும் புதுப்பிக்கத்தக்க வகையிலும் உள்ள ஆற்றல்களான சூரிய சக்தி, நீர் மின்சக்தி, காற்றாலை சக்தி, அலை சக்தி, புவி வெப்ப சக்தி, உயிரி எரிபொருள் சக்தி போன்றவற்றை பயன்படுத்தி நமது மின் தேவை மற்றும் வெப்ப தேவைகளை நிச்சயமாக பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
உலக நாடுகளில் பல இம்முயற்சியில் தங்களை ஈடுபடுத்தி முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. நமது மத்திய மாநில அரசுகள் இந்த புதுப்பிக்கத்தக்க சக்திகளை கையாண்டு நாட்டின் மின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் மொத்த ஆற்றல் தேவையில் 20 சதவீதத்தை இந்த புதுப்பிக்கத்தக்க வளங்களைக் கொண்டு பெற்று வருகிறது. மேலும் 2030 ஆண்டுக்குள் இது 50 சதவீதம் என்ற இலக்காக கொண்டு திட்டமிட்டு வருகிறது.
மாசுக்கட்டுப்பாடு மட்டுமின்றி சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக பேணிக்காத்திட புதுப்பிக்கத்தக்க வளங்களை நோக்கி நாம் பயணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. புவி வெப்பமயமாதல் மற்றும் கால நிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்பட இருக்கும் மோசமான பாதிப்புகளில் இருந்து நம்மையும் பூமியையும் காத்துக் கொள்ள இப்போது நாம் செயல்படவில்லை என்றால் இனி எப்போதும் முடியாது.
அதிக மின் தேவை கொண்ட உலகளாவிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. காற்று மற்றும் சூரிய சக்தி சக்திகளான புதுப்பிக்கத்தக்க வளங்களை நாற்பத்தி ஆறு புள்ளி மூன்று சதவீதம் வரை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் வரையிலான புள்ளி விவரமாகும்.
இந்திய அரசு வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலம் 500 ஜிகா வாட்ஸ் வரை மின் தேவை பெற திட்டமிட்டுள்ளது. மேலும் வரும் 2070 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைய திட்டமிட்டுள்ளதாக நமது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க வளங்களை கொண்டு மின் தேவை பூர்த்தி செய்து கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா (405Twh) நான்காவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனாவும்(3749 Twh) அமெரிக்கா(1493atwh) பிரேசில் (940Twh) முறையே 2 மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
எதிர்கால சந்ததியையும் நமது பூமித்தாயையும் காக்க இப்போதே விழிததுக் கொள்வோம்.
நமது சக்தி நமது பூமி!
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?
பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.. மெட்டா நிறுவனம்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!
ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்
கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!
தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!
{{comments.comment}}