தேய் பிறை ஏகாதசி எனப்படும் வருத்தினி ஏகாதசி.. விரதம் இருப்போர் வீடுகளில் இன்னல் விலகும்

May 23, 2025,03:40 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மே மாதம் 23ஆம் தேதி விசுவா வசு வருடம் 20 25 வைகாசி மாதம் ஒன்பதாம் நாள் வெள்ளிக்கிழமையான இன்று கிருஷ்ணபக்ஷை ஏகாதசி அதாவது தேய்பிறை ஏகாதசி நாள். இந்த தேய்பிறை ஏகாதசி "வருத்தினி ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது.


வருத்தினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்கள் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் விலகி நன்மைகள் பெருகும். அவரவர் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். இந்த விரதம் மேற்கொள்பவர்கள் உடல் மற்றும் மனநலம் சிறக்கும்.


நாம் வாழும் வாழ்க்கை நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப பிறவி அமையப் பெற்றுள்ளோம். துன்பப்படும் நேரங்களில் நற் கதியே இல்லையா? என்று கேட்பவருக்கும் தான் நம் முன்னோர்கள் விசேஷ தினங்களையும், விரதம் ,வழிபாடுகளையும் வகுத்து பின்பற்றி வந்தனர் .அப்படி அவர்கள் வகுத்த விரத நாட்களை கடைபிடிக்க நம் இன்னல்கள் விலகி, நன்மைகள் பெருகும். சுபிட்சம் உண்டாகும். அப்படி நமக்கு நன்மைகள் அருளும் விரதம் ஏகாதசி விரதம் இன்று அமைந்துள்ள ஏகாதசி விரதம் வருத்தினி ஏகாதசி விரதம் என்ற சிறப்பு வாய்ந்தது.




பெருமாளுக்கு உகந்த  ஏகாதசி  விரதங்களிலும் சிறப்பு வாய்ந்தது இந்த வருத்தில் ஏகாதசி.  ஸ்ரீ கிருஷ்ணர் இதனை பற்றி கூறியதாவது: ஸ்ரீஹரியின் தாமரை பாதங்களில் மனதை நிலைநிறுத்தி  ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்களுக்கு பத்தாயிரம் ஆண்டுகள் தவம் செய்ததற்கு சமமான பலன் கிடைக்கும் என்று கூறினார்.


வருத்தினி ஏகாதசி யின் மகிமைகளை படிப்பவர்களுக்கும் , கேட்பவர்களுக்கும் பத்தாயிரம் பசுக்களை தானம் செய்ததற்கு சமமான பலன் பெறுவார்கள் என்பது ஐதீகம். சிலர் வீடுகளில் கடுமையான விரதம் மேற்கொள்வார்கள் .புனித நதிகளில் நீராடி வருவர். பெருமாளின் பஜனை பாடல்கள் பாடுவதன் மூலம் மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்  நல்ல அதிர்ஷ்டம், அமைதியான வாழ்க்கை அமையப்பெறும் என்பது ஐதீகம்.


வேலைக்குச் செல்பவர்களும் அவரவர் உடல் நிலைக்கு தகுந்தவாறு விரதம் மேற்கொள்ளலாம். எளிமையான உணவு, உப்பு சேர்க்காத உணவு , பால், பழங்கள் ,தயிர் எடுத்துக் கொள்ளலாம்.


வீட்டின் பூஜை அறையில் பெருமாள் லட்சுமி  ,தாயார் படத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து ,தாமரை பூ சமர்ப்பித்து கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் பசுந்தயிர், நைவேத்தியம் வைத்து பெருமாள் லட்சுமி ஸ்தோத்திரம் ,மந்திரங்கள் துதித்து தீப தூப ஆராதனை செய்து வழிபட சுபிட்சம் உண்டாகும்.


மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று பகவானுக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம் .கோவிலில் இருந்து வீடு திரும்பியதும் நைவேத்தியமாக வைக்கப்பட்ட தயிர், துளசி இலைகளை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிரசாதமாக தந்து, விரதம் மேற்கொள்பவர்கள் உண்டு தங்களுடைய விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.


வருத்தினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்கள் மற்றும் பூஜை செய்பவர்கள் அனைவருக்கும் பெருமாள் அருள் கிடைக்கப்பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் இணைந்து தொடர்ந்திடுங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

news

மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

அதிகம் பார்க்கும் செய்திகள்