ஐபிஎல் கிரிக்கெட் கொண்டாட்டம்: சென்னையில் நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

Mar 22, 2024,05:45 PM IST
சென்னை: சென்னையில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 17வது ஐபிஎல் திருவிழா இன்று முதல் தொடங்கி மே 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களும் கலந்த கொண்டு விளையாட உள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் இன்று  தொடங்கும் விழா மாலை 6:30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இந்தி பாடகர் சோனு நிகாம். இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர்  இசை வெள்ளத்தில் மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

தொடக்க விழா காரணமாக இன்று மட்டும் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. மற்ற நாட்களில் இரவு 7.30 மணிக்கும், ஒரே நாளில் 2 போட்டிகள் நடைபெற்றால், ஒரு போட்டி மாலை 3.30க்கும், மற்றொரு போட்டி இரவு 7.30க்கும் தொடங்க உள்ளது. நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் vs பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ்சும் மோதுகின்றன.ஐபிஎஸ் போட்டியை காண்பதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் கடந்த 18ம் தேதியே விற்று தீர்ந்து விட்ட நிலையில், இப்போட்டிக்கான டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.



இந்நிலையில், இப்போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்பதால், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஐபிஎஸ் போட்டிகளை காண வருபவர்கள் தங்களது ஆன்லைன் டிக்கெட்டைக் காட்டி மாநகரப் பேருந்துகளில் இன்று இலவசமாக பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

மேலும், போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் 3 மணி நேரத்திற்கும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.ரசிகர்கள் வீடு திரும்புவதற்கு வசதியாக இந்த சேவைகள் செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்