உணவு பாதுகாப்பு தினம் 2025 ஜூன் 7 (World Food Safety Day)

Jun 06, 2025,03:00 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


உணவு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உணவு விநியோக சங்கிலி முழுவதும் உணவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்த உணவு பாதுகாப்பு தினம்  முக்கிய பங்கு வகிக்கிறது .உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு  என இணைந்து இந்த தினத்தை முன்னெடுக்கின்றன.


முதல் உலக உணவு பாதுகாப்பு தினம் 2019-ல் அனுசரிக்கப்பட்டது.Food Safety Standards Authority of India (FSSAI) தலைமையகத்தில் முதல் உலக உணவு பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது


முக்கிய நோக்கம்:




உணவு பாதுகாப்பு தினத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் உணவு பாதுகாப்பு சார்ந்த விவகாரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உணவு விநியோக சங்கிலியில் உள்ள அனைத்து துறைகளிலும் நடவடிக்கைகளில் ஊக்குவிப்பது ஆகும். மக்கள் உணவு பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கவும் அனைத்து தரப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.


உணவு மூலம் பரவும் நோய்களை குறைப்பதிலும் ஆரோக்கியமான பாதுகாப்பான உலகத்தை மேம்படுத்துவதிலும் இந்த உணவு பாதுகாப்பு தினம் முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்த ஆண்டு 2025 உலக உணவு பாதுகாப்பு தினத்தின் தீம்:


இந்த ஆண்டின் உணவு பாதுகாப்பு தினத்தின் கருப்பொருள் யாதெனில் "உணவு பாதுகாப்பு: அறிவியல் செயலில்" ஆகும். ஒவ்வொரு மனித வாழ்விலும் உணவின் தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்து கட்டங்களிலும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் அறிவியலின் பங்களிப்பை எடுத்துரைக்கிறது இந்த கருப்பொருள்.


இந்த சர்வதேச அனுசரிப்பு, உணவு பொருட்களை பாதுகாப்பான கொள்முதல், கையாளுதல் மற்றும் இறுதி நுகர்வோருக்கு வழங்குவதில் கவனத்தை ஈர்க்கும் விழிப்புணர்வு முயற்சிகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.


உணவு தொழில் நுட்ப நிறுவனங்கள், பேக்கேஜிங் நிறுவனங்கள், துரித உணவு சங்கிலிகள், அரசாங்கங்கள் மற்றும் தனி நபர்கள் உணவு பாதுகாப்பு  தொடர் பாக கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்துவதே முக்கிய நோக்கமாகும். குடும்பங்கள் இடையே உணவு மூலம் பரவும் நோய்கள் மற்றும் அவற்றின் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்..


செயல்பாடுகள்:


உணவு பாதுகாப்பு குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதை நோக்கமாக கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. உணவு பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் மற்றும் அவற்றின் நுகர்வு ஆகியவற்றால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.


உணவு மூலம் பரவும் நோய்களை குணப்படுத்துவதற்காக பாதுகாப்புகள் மற்றும் மருந்துகளை உருவாக்குவதில் அறிவியல்  தவிர்க்க முடியாத பங்கை வகிக்கிறது. நாம் இந்த நாள் உலக உணவு பாதுகாப்பு தினம் மட்டுமல்லாமல் குழந்தைகள் கருவில் இருக்கும் தருணத்திலிருந்து வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை நல்ல ஆரோக்கியமான பாதுகாப்பான உணவை அளிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். ஏனென்றால் குழந்தைகளே நம் நாட்டின் "வருங்கால தூண்கள்".


மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்