- பன்முகத் திறமையாளர் ச. ஸ்ரீபிரியா பழனிவேலு
குமரேசன் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தான். அப்பா இல்லை. அம்மா வயல் வேலைக்குப் போய் அவனைப் படிக்க வைத்தாள். குமரேசனிடம் ஒரே ஒரு சொத்து உண்டு—எந்த நிலையிலும் பொய் சொல்ல மாட்டான்.
ஒருநாள் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் ஆடும்போது பந்து பறந்து, தலைமை ஆசிரியர் அறைக் கண்ணாடியை உடைத்தது. அடித்தது யார் எனத் தெரியவில்லை. தலைமை ஆசிரியர் கோபத்தில், “உண்மையைச் சொல்லாவிட்டால் வகுப்பு முழுவதும் தண்டனை” என்றார்.
பந்தை அடித்தது ஊர்ப் பெரியவரின் பேரன் மதி. “நீ ஒன்னும் சொல்லாதே. நான் பெரிய இடத்துப் பையன். என் தாத்தா பார்த்துக்குவார். நீ ஏழை, உன்னைத்தான் மாட்டிவிடுவாங்க” என்று மதி குமரேசனை மிரட்டினான்.
மறுநாள் விசாரணை. எல்லோரும் மௌனம். தலைமை ஆசிரியர் குமரேசனைப் பார்த்தார். “உனக்குத் தெரியுமா?”
குமரேசனுக்கு அம்மாவின் முகம் நினைவுக்கு வந்தது. “பொய் சொல்லி வாழ்ற வாழ்க்கை வாழ்க்கையே இல்லைடா” என்பாள்.
நடுங்கும் குரலில் நிமிர்ந்தான். “ஐயா, பந்தை அடிச்சது மதிதான். நான் பார்த்தேன்.”

அவ்வளவுதான். மதி எழுந்து, “இவன் பொய் சொல்றான் சார். இவன்தான் அடிச்சான்” என்று கத்தினான். ஊர்ப் பெரியவரும் பள்ளிக்கு வந்து, “என் பேரன் அப்படிச் செய்ய மாட்டான். இந்த ஏழைப் பையன்தான் காரணம்” என்றார்.
தலைமை ஆசிரியர் இரண்டு பேரையும் தனியே அழைத்தார். “கண்ணாடி உடையறதுக்கு முன்னாடி என்ன பேசிக்கிட்டீங்க?” என்றார்.
மதி தடுமாறினான். குமரேசன் தெளிவாகச் சொன்னான்: “மதி ‘சிக்ஸர் அடிக்கிறேன் பாரு’ன்னு சொல்லி ஓங்கி அடிச்சான் சார். பந்து நேரா ஜன்னலுக்குப் போச்சு. நான் ‘வேணாம்டா’னு சொன்னேன்.”
உண்மையின் தெளிவு, பொய்யின் தடுமாற்றம். தலைமை ஆசிரியருக்குப் புரிந்தது. மதியின் தாத்தாவுக்கும் உண்மை உரைத்தது. தலை குனிந்தார்.
“தப்பு செஞ்சது என் பேரன்தான். மன்னிச்சுக்குங்க. கண்ணாடி செலவை நான் ஏத்துக்குறேன்” என்றார். மதியிடம் திரும்பி, “பொய் சொல்லி தப்பிக்கலாம்னு நினைச்சியா? இன்னைக்கு ஒரு ஏழைப் பையனோட வாய்மை உன்னைத் தோற்கடிச்சிருச்சு பார்த்தியா?”
அன்று பள்ளி விட்டு வரும்போது குமரேசனின் கையில் மதி ஒரு புது நோட்டுப் புத்தகம் கொடுத்தான். “தப்பு பண்ணிட்டேன். இனிமே உண்மைதான் பேசுவேன்” என்றான்.
அம்மா கேட்டாள், “ஏன்டா கண்ணு கலங்குது?”
“இல்லம்மா, வாய்மை ஜெயிச்சதுனால சந்தோஷம்.”
பொய் ஒருநாள் வெல்லலாம், ஆனால் வாய்மை என்றும் வெல்லும். உண்மை பேசத் துணிவு வேண்டும். அந்தத் துணிவே நம்மை உயர்த்தும்.
(பன்முகத் திறமையாளர் ச. ஸ்ரீபிரியா பழனிவேலு, உதவித் தலைமையாசிரியர், பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி , பட்டுக்கோட்டை)
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}