திருப்பதி : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்குவதான அறைகள் ஒதுக்கீட்டில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தாலும், சாமானிய பக்தர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடத்தின் அனைத்து நாட்களுமே திருவிழா நடைபெறுவது அனைவருக்கும் தெரியும். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் எவ்வளவு கூட்டம் வந்தாலும் சாமானிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வது, அவர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்யவதற்கு என திருப்பதி தேவஸ்தானம் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. உற்சவ காலங்களில் சாமானி மக்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க பல முக்கிய சேவைகள் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் அக்டோபர் 04ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, அக்டோபர் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதத்தின் 3வது மற்றும் 4வது வாரங்களில் இந்த பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் ஒன்பது நாட்களும் உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவியுடன் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் செய்வார். இது குறித்த அட்டவணையை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே வெளியிட்டு விட்டது. இந்த 9 நாட்களும் அனைத்து ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், புரட்டாசி பிரம்மோற்சவம் நடைபெறும் காலங்களில் திருமலையில், நன்டையாளர்கள் யாருக்கும் அறை ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. சாமானிய மக்களுக்கு அதிக அறை ஒதுக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பிரம்மோற்சவத்தின் துவக்க நாளான அக்டோபர் 4 மற்றும் நிறைவு நாளான அக்டோபர் 12 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் சலுகை அடிப்படையில் சிறப்பு தரிசனம் செய்ய நன்கொடையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் பிரம்மோற்சவ காலத்தில் நன்டையாளர்களுக்கான டிரெஸ்ட் மற்றும் அனைத்து திட்டங்களும் முடக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}