தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண் ஸ்னோலின் தாயார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி சத்தம் போடாமல் தேவையில்லாத வாதங்களில் ஈடுபடாமல், உறுப்பினர் சேர்க்கையை மாநிலம் முழுவதும் முடுக்கி விட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கையில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு முக்கிய அம்சமாக தூத்துக்குடி தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் ஒரு உறுப்பினராக வனிதா என்பவர் தன்னை இணைத்துக் கொண்டார்.
இவர் யார் என்றால் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டெர்லைட் போராட்டம் நடந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொடூரமாக பலியானவர்தான் ஸ்னோலின். அவரது தாயார்தான் வனிதா.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஆள் அம்பு படை என்று யாரும் இல்லாமல் ஸ்னோலின் வீட்டுக்கு இரவோடு இரவாக போய் அவரது குடும்பத்தினரைச் சந்தித்தார் விஜய். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார் விஜய். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்தார்.
இதன் காரணமாக இந்த மக்கள் மத்தியில் விஜய்க்கு தனி இடம் உள்ளது. இதனால்தான் தற்போது ஸ்னோலின் தாயார் விஜய் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட தவெக தலைவர் அஜீதா ஆக்னஸ் தலைமையில் நடந்த நிகழ்வில் வனிதா உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
ஸ்னோலினின் தாயார் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் மொத்தமாக தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல நாகப்பட்டனத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்துள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் தவெகவினர் மும்முரமாக இறங்கியுள்ளதால் மற்ற கட்சியினர் ஒரு வித படபடப்புடன் இதைப் பார்த்து வருகின்றனராம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}