சென்னை: தவெக ஏற்கனவே பல்வேறு வரலாறுகளை எழுதிக் குவித்து வரும் நிலையில் ஜூன் மாதம் மீண்டும் ஒரு வரலாற்றை எழுதும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஜூன் 18ம் தேதி தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஒரு ராஜ்யசபா இடத்திற்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை தவெக ஈஸியாக வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து காலியாகவுள்ள தலா ஒரு இடத்திற்கு இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக சார்பில் எம்.பியாக இருந்து வந்த சி.வி.சண்முகம், சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற காரணத்தால் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த இடத்திற்குத்தான் தற்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத் தேர்தலுக்கான கால அட்டவணைப் பட்டியல் வருமாறு:
.jpg)
தேர்தல் குறித்த அறிவிப்பு - 1 ஜூன்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி - 8 ஜூன்
வேட்புமனுக்கள் பரிசீலனை - 9 ஜூன்
வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி - 11 ஜூன்
வாக்குப்பதிவு தேதி - 18 ஜூன்
வாக்குப்பதிவு நேரம் - காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
வாக்குகள் எண்ணுதல் - 18 ஜூன் மாலை 05:00 மணிக்கு
வாக்குச் சீட்டு அடிப்படையில் இந்தத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவுக்கு முதல் ராஜ்யசபா எம்பி கிடைக்க வாய்ப்பு
ராஜ்யசபா இடைத் தேர்தல் தவெகவுக்கு பம்பப் அறிவிப்பாக வந்துள்ளது. இந்தத் தேர்தலில் தவெக வேட்பாளரை நிறுத்தினால் அந்த வேட்பாளர் எளிதாக வெல்லமுடியும். காரணம் தவெகவிடம் அதிக அளவிலான எம்.பிக்கள் இருப்பதால் அது சாத்தியமாகும்.
தற்போது தவெகவுடன் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கை கோர்த்துள்ளன. திமுகவுடன் இவர்களுக்கு உறவு கசக்க ஆரம்பித்து விட்டது. எனவே திமுக கூட்டணியிலிருந்து இவை நிரந்தரமாக வெளியே வரும் சூழல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மறுபக்கம் திமுக, அதிமுக ஆகியவை கை கோர்த்து களத்தை சந்தித்தாலும் கூட தவெகவுக்கு எதிரான பலம் அவர்களிடம் இல்லை. காரணம் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். எனவே எளிதாக தவெக வேட்பாளர் வெற்றி பெற்று எம்.பி ஆக முடியும்.
எனவே இந்தத் தேர்தலில் தவெக எளிதாக வெல்லும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அப்படி நடந்தால் கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் சட்டசபையில் ஆட்சியைப் பிடித்து, நாடாளுமன்றத்திற்குள்ளும் கால் வைத்த முதல் கட்சியாக தவெக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
கரூரில் தேர்தல் பிரச்சாரச் சம்பவத்தின் போது நடந்தது என்ன? .. விளக்கிய முதல்வர் விஜய்
ஓடு ஓடு ஓடுன்னு.. திருச்சி ஏர்போர்ட்டுக்கு ஓடியது யார்?.. முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி
கரூரில்.. 31 பேருக்கு பணியிட ஆணை வழங்கிய முதல்வர் விஜய்.. யார் யாருக்கு எங்கு பணி?
தேர்தல் வழக்கு எதிரொலி.. திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தத் தடை
Nature: It Is Beautiful.. இயற்கை அழகானது!
Rose Garden.. ரோஜா ரோஜா!
நல்லதுக்காக பொய் சொல்லலாம்.. தப்பே இல்லை!
Work hard in silence.. வெற்றி சத்தமாக பேசட்டும்!
True Friends Force you grow.. நல்ல நண்பர்கள் இருந்தால்...!
{{comments.comment}}