ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

Sep 15, 2025,01:09 PM IST

சென்னை : கடந்த சில நாட்களாகவே டிவி சேனல்களிலும் சரி, சோஷியல் மீடியாக்களிலும் சரி அதிகம் பேசப்படுவது விஜய்யின் பிரச்சார சுற்றுப் பயணமும், அதற்கு திமுக கொடுக்கும் கவுன்ட்டர்களும் தான். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என பலரும் விஜய்யை பற்றி மறைமுக விமர்சனங்களை முன் வைக்கும் செய்திகள் தான் அதிகம் காண முடிகிறது.


விஜய், திமுக ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தே, "தமிழகத்தை மீட்போம்; மக்களை காப்போம்" என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்கி, ஏறக்குறைய 150 தொகுதிகளில் பிரச்சாரம் செய்து முடித்து விட்டார் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி. இடை விடாமல் அவர் செய்யும் பிரச்சாரத்தில் அந்தந்த பகுதி பிரச்சனைகள் பற்றி பேசுவது, அதிமுக பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிப்பது, திமுக அரசை கேள்வி கேட்பது என தீவிர பிரச்சாரத்தை செய்து வருகிறார். ஆனால், இந்த தகவல்கள் ஒரு சில செய்தி நாளிதழ்கள், டிவி சேனல்களில் ஒரு ஓரமாக மட்டுமே வந்து செல்கிறது.  விஜய், திமுக பேச்சு அளவிற்கு இபிஎஸ்., பேச்சு பெரிய அளவில் பேசப்படவில்லை.




இன்றைய தேதியில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தால் மீண்டும் திமுக.,வோ அல்லது விஜய்யோ தான் ஆட்சிக்கு வருவார்கள் என்ற அளவுக்குத்தான் மீடியாக்களிலும் கூட பேச்சுக்கள் அதிகம் காணப்படுகின்றன. அதிமுக பிரச்சாரத்தில் இன்று மூன்றாவது இடத்திற்கே தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தங்களின் பிரச்சாரத்தை, தங்களை பற்றிய செய்திகளை மக்களிடம் அதிகம் கொண்டு போய் சேர்க்காததே அதிமுக.,வின் இந்த பின்னடைவிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. யூட்யூப், டுவிட்டர் போன்ற தளங்களில் இபிஎஸ் பிரச்சாரம் சென்ற சேருவதற்கு பதிலாக அதிமுக.,விலும், அதன் கூட்டணியிலும் எழுப்பப்படும் கலகக் குரல்கள் போன்ற நெகட்டிவான விஷயங்கள் மட்டுமே அதிக பரவிக் கொண்டிருக்கிறது.  இதை அதிமுக தலைமை கவனிக்கிறதா என்று தெரியவில்லை.


மக்களை நேரடியாக களத்தில் சென்று சந்தித்தாலும், 25 முதல் 40 வயதுடைய வாக்காளர்களை அதிகம் சென்றடைந்து, அவர்களின் ஓட்டுக்களை கவர வேண்டும் என்றால் சோஷியல் மீடியா, அவர்கள் அதிகம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் வழியாக தான் அவர்களை சென்றடைய முடியும். அதிமுக.,வின் ஐடி விங், வியூக வகுப்பாளர்கள் இன்னும் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபடாமல் இருப்பதே இபிஎஸ்.,ன் பிரச்சாரம் தமிழக மக்களிடம் இதுவரை எடுபடாமல் போனதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. 




பாரம்பரிய தேர்தல் பிரச்சாரத்தை இபிஎஸ் கையில் எடுத்து களத்தில் இறங்கினாலும், நவீன யுக்திகளையும் முக்கிய ஆயுதமாக கையில் எடுத்து பயன்படுத்தினால் மட்டுமே 2025 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக.,வின் வெற்றி என்பது சாத்தியமாகும் என சொல்லப்படுகிறது.


மறுபக்கம் விஜய் தரப்பு எதைச் செய்தாலும் அது செய்தியாகிறது.. விஜய் குறித்து நாம் தமிழர் கட்சியினர் எதிர்மறையாக பேசினாலும் கூட அது விஜய் தரப்புக்கு சாதகமாக கொண்டு செல்லப்படுவதும் இதில் சுவாரஸ்யமான விஷயம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

உயிரின் சிரிப்பு

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

கல்லறை தேடுகிறது!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை குறைவு.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

Red Alert: மும்பை, தானேயில்.. வெளுத்து வாங்கும் கன மழை.. மக்களே உஷாரா இருங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்