சென்னை: முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தவறு செய்யும் நிர்வாகிகள் மீது சமரசமின்றி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்ட புகாரில் சிக்கிய தவெகவின் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகி ஒருவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளராகப் பதவி வகித்து வந்தவர் டி.விஜயகுமார். இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி மாமூல் கேட்டு மிரட்டியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.
தனக்கு மாதம் ரூ. 1 லட்சம் மாமூல் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியதாக சர்ச்சை வெடித்தது. செங்கல் சூளை உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பு கூடியது.

இது தொடர்பான புகார்கள் தவெக தலைமைக்குச் சென்றதை அடுத்து, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் தலைமை நிர்வாகிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதில் விஜயகுமார் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்றும், அவரது செயல்பாடுகள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
விசாரணையின் முடிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, "ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம், கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளராகப் பதவி வகித்து வந்த டி.விஜயகுமார், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர் வகித்து வந்த ஒன்றியச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று (26.05.2026) முதல் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். எனவே, கழகத் தோழர்கள் யாரும் கட்சி ரீதியாக அவருடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது."
இச்சம்பவம் ராணிப்பேட்டை மாவட்ட தவெகவினர் மத்தியிலும், தமிழக அரசியல் பரப்பிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}