சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கில் நாளை மறுநாள் (ஜூலை) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
2024ம் ஆண்டு தவெக கட்சியை தவெக தலைவர் விஜய் தொடங்கினார். அதன்பின்னர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். விஜய் வெளியிட்ட கட்சிக் கொடியில் இருக்கும் யானை சின்னத்துக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்தது. மேலும், அந்த கொடியில் உள்ள யானைச் சின்னத்தை தவெக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலர் இளங்கோவன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. தனித்துவத்துடன் தவெக கொடி உருவாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாளை மறுநாள் வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!
ஆசிரியர் ஓர் அகல்விளக்கு
{{comments.comment}}