சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தான் மரபு. ஒவ்வொரு முறையும் மரபு தொடர்பாக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் நிலவுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை இன்று ஆளுநர் உரையுடன் அவைக் கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆளுநர் உரையைப் படிக்காமலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் இன்றி கடந்த 2023, 2024ம் ஆண்டு நடைபெற்ற அவைக் கூட்டத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழக சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழக சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழக சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில்.. Never put the key to your happiness into someone else pocket!
வெறும் பொடியாகவே வாயில் போட்டு சுவைக்கலாம்.. அது என்ன சொல்லுங்க!
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? (பழமொழியும் உண்மை பொருளும்)
மாதத்தில் சிறந்தது மார்கழி...!
மாயவனின் அருளோசை!
பொழுதோ அதிகாலை.. மாதமோ மார்கழி.. நேரமோ அருள்தரும்.. மங்கையவள் கோலமோ பூங்காவனம்!
நமக்குள் இருக்கும் ரோபோ (Robot)!
கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!
2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
{{comments.comment}}