சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் அதிரடி முன்னிலை சென்னையை அதிர வைத்துள்ளது. காரணம், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக வே முன்னிலை வகித்து வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து வேட்பாளர்களையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார் விஜய். பெரம்பூரில் விஜய் முன்னிலை வகித்து வருகிறார்.
சென்னையில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன. இதில் ஆரம்பத்தில் தபால் வாக்குகளில் ஓரிரு தொகுதிகளில்தான் முன்னிலை கிடைத்தது. ஆனால் மக்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ண ஆரம்பித்ததும் நிலைமையே தலைகீழாக மாறிப் போனது.

படிப்படியாக ஒவ்வொரு தொகுதியாக தவெக லீட் எடுக்க ஆரம்பித்தது. கடைசியில் பார்த்தால் இப்போது 16 தொகுதிகளையும் மொத்தமாக அள்ளுகிறது தவெக. இது திமுக தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முதல்வரே பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மட்டும் முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால் கடைசியில் அவரும் தற்போது பின்னுக்குப் போய் விட்டார்.
சென்னை கிங் என்று விஜய்யை அவரது ரசிகர்கள் செல்லமாக அழைப்பது உண்டு. ஆனால் இப்போது அரசியலிலும் அவரை சென்னை சூப்பர்ப் கிங் ஆக்கி விட்டார்கள் அவரது கட்சியினர். தலைநகர் சென்னையில் திமுக, அதிமுக அல்லாத ஒரு கட்சி மொத்தத் தொகுதிகளையும் பிடிப்பது என்பது இதுவரை நடந்திராத வரலாறு.
அதிமுக படு பலமாக இருந்தபோதும் கூட சென்னையில் மட்டும் திமுக வென்ற வரலாறு பல உண்டு. ஆனால் விஜய் புதிய வரலாற்றை மாற்றி எழுதி விட்டார்.
முகம் மலரோ தாமரைப்பூ.. மனம் மணமோ மல்லிகைப்பூ!
வேறு முகங்கள்!
நூலகமும் நானும்.. மயிலாப்பூர் முதல் பாஸ்டன் வரை!
அமைதியா இரு
Short Story by Sudha Thirunarayanan: பை!
தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
{{comments.comment}}