சகோதரர் சீமான்.. பிறந்த நாள் வாழ்த்துகள் கூறி நாம் தமிழர் கட்சிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!

Nov 08, 2024,05:54 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறி அக்கட்சியினரை நெகிழ வைத்துள்ளார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய். இந்த வாழ்த்துச் செய்தியை தவெக கட்சியினரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விஜய்யை வாய்க்கு வாய் தம்பி தம்பி என்று கூறி வந்தார். இதெல்லாம் தவெக கட்சியின் மாநில மாநாடு நடக்கும் வரைக்கும்தான். அந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியினரின் போக்கே மாறி விட்டது.  குறிப்பாக சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் கூட்டத்தில் சீமான் பேசியது அனைவரையும் அதிர வைத்து விட்டது.



விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து அதில் பேசியிருந்தார் சீமான். குறிப்பாக ஒன்னு அந்தப் பக்கம் நில்லு. இல்லைன்னா இந்தப் பக்கம் நில்லு. நடு ரோட்டுல நின்னா லாரி அடிச்சு செத்துப் போய்ருவே என்று அவர் பேசியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும் சீமான் உள்பட யார் நம்மை விமர்சித்தாலும் அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது. ஆதாரத்துடன் மட்டுமே நமது பதில்களை வைக்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டதால் சீமானை அநாகரீகமாக விமர்சிக்காமல் தவெகவினர் தவிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சீமான் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்யும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஜய் வாழ்த்தியுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியை தவெகவினர் கொண்டாடி வருகின்றனர்.  மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்களே, தலைவன் எப்பவும் தங்கம் தான் டா, இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை விஜய் கட்சித் தொண்டர்கள் பகிர்ந்து வருகின்னர். அதேசமயம், ரொம்ப நல்லவரா இருக்காதிங்க அண்ணா என்ற கமெண்ட்டையும் பார்க்க முடிந்தது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்

news

நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!

news

பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?

news

தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு

news

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

news

முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்

news

அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி

news

நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்

news

டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்