சென்னை: தவெக தலைவர் விஜய் நாளை காஞ்சிபுரத்தில் உள்ள மக்களை சந்திக்கிறார் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்திற்கு பின்னர் கடந்த 2 மாதங்களாக மக்கள் சந்திப்பை தவிர்த்து வந்தார். தற்போது மக்கள் சந்திப்பிற்கு தயாராகி வருகிறார். கடந்த 20ம் தேதி தவெக தலைவர் விஜய் சார்பாக, சேலத்தில் பிரச்சாரம் நடத்த அனுமதி கேட்டு சேலம் காவல் ஆணையரிடம் தவெக வினர் மனு அளித்தனர். இதனையடுத்து பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து, நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவரச்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை காலை தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் 2000 பேர்களுக்கு மட்டும் அனுமதி என்றும், இந்த உள்ளரங்கு சந்திப்பு காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளின் பேரில் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அத்தே.. அத்தே...!
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
முட்டி நின்று பார்த்ததனால்... புத்தம் புதிதாய் பூத்த மலர் போல்...!
சற்று ஆறுதலடைந்த வாடிக்கையாளர்களை மீண்டும் அதிர்ச்சிஅடையச் செய்த தங்கம் விலை.. விலை என்ன தெரியுமா?
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைக்கிறது காங்!
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி இங்கே வா வா (மழலையர் பாடல்)
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
நான் விரும்பும் வகுப்பறை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 22, 2025... இன்று பணவரவு அதிகரிக்கும்
{{comments.comment}}