திருச்சி: சட்டத்திற்கு புறம்பாக நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ போட்ட ஹரிஹரன் மற்றும் ஜெயராமன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னொரு காலத்தில் நம் முன்னோர்கள் ஒருவரின் சுய அடையாளத்திற்காக பச்சை குத்தும் வழக்கத்தை கடைபிடித்து வந்தனர். இந்த பச்சை குத்துதல் பெரும்பாலும் நரம்பு இல்லாத கை சதை பகுதிகளிலேயே குத்துவதை நடைமுறையாக கொண்டும் வந்தனர். ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெண்கள் வரை உடம்பு முழுக்க வண்ண வண்ணமாக டிசைன் டிசைனாக டாட்டூ குத்துவதை கடைபிடித்து வருகின்றனர். இந்த கலாச்சாரம் தற்போது பேஷனாகவும் ஆகிவிட்டது. காலப்போக்கில் டிரெண்டாகவும் உருவெடுத்து நிற்கிறது.

காமெடி நடிகர் வடிவேல் செல்வது போல ஒரு இடம் பொருள் ஏவல் வேண்டாமா என்பதற்கு ஏற்ப எந்த ஒரு வரைமுறையே இல்லாமல் கழுத்து காது கை கால் முதுகு வயிறு தொடை என எல்லா இடங்களிலும் டாட்டூ போடுகின்றனர். இன்றைய இளைஞர்கள் இப்படி டாட்டூ போடுவதால் ஒருவரிடம் இருந்து தன்னை வித்யாசப்படுத்திக் கொள்வதற்காக இந்த முறைகளை கடைபிடித்து வருகிறார்களாம்.
அந்த வகையில் திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருபவர் ஹரிஹரன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாடலுக்காக மும்பைக்குச் சென்று தனது நாக்கை இரண்டாகப் பிளந்து டாட்டூ போட்டு அதிலும் தனது கண்களை நீல நிறமாக மாற்றி அறுவை சிகிச்சை செய்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருச்சிக்கு வந்த ஹரிஹரன் தனது கடையில் பணியாற்றி வந்த நண்பரான ஜெயராமுக்கு இதே போல நாக்கை இரண்டாக கிழித்து அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டும் காட்சியை வீடியோவாக பதிவேற்றம் செய்து அதனை தனது instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த சிலர், இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக பலரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஹரிஹரன் மற்றும் ஜெயராமனை கைது செய்து ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதால் அதிரடியாக சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்தனர்.
இது போன்ற வீடியோக்களை பார்த்து மாணவர்கள் இளைஞர்கள் தவறான செயலில் ஈடுபடக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும் வீட்டுக்கூரை சூரிய மின்சக்தி திட்டம்
ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் மூச்சு திணறி பலி!
வருகிறார் வா வாத்தியார்.. ரீலீஸ் தேதி அறிவிப்பு.. 3வது லிரிக்கல் வீடியோவும் வெளியானது
முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமான சந்தித்து பேசினோம்: செல்வப்பெருந்தகை பேட்டி
இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி.. அனைத்து விலைகளும் உயரும் அபாயம்!
வின்டோஸ் அப்டேட் குழப்பத்தால்.. நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து.. சேவைகளில் தாமதம்
அமெரிக்காவை அதிர வைக்கும் Bomb Cyclone.. பல ஊர்களை பனி மூடியது!
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்
ரூ. 93,000க்கு வாங்கிய காரின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}