இலங்கை அமைச்சரவை.. 2 தமிழ் அமைச்சர்கள்.. ஒருவர் தமிழில் பதவியேற்க.. இன்னொருவர் சிங்களத்தில்!

Nov 18, 2024,04:25 PM IST

கொழும்பு: இலங்கையில் அமைந்துள்ள புதிய அமைச்சரவையில் தமிழர்கள் இரண்டு பேர் பதவியேற்றுள்ளனர். இதில் ஒரு அமைச்சர் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இன்னொருவர் சிங்களத்தில் பதவியேற்றார்.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. பிரதமராக டாக்டர் ஹரிணி அமரசூரியா பதவியேற்றார். இவர்கள் தவிர அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.



மொத்தம் 21 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அதில் 2 பேர் தமிழர்கள் ஆவர். ஜனாதிபதி அனுரா குமார திசநாயகே வசம், பாதுகாப்பு, நிதி, திட்டமிடல், டிஜிட்டல் எக்கானமி ஆகிய துறைகள் வருகின்றன. மற்ற இலாகாக்கள் பிரதமர் உள்ளிட்டோருக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழர்களைப் பொறுத்தவரை சரோஜா சாவித்ரி பால்ராஜ் மற்றும் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பதவியேற்றுள்ளனர். இதில்  சரோஜா சாவித்ரி பால்ராஜ் ஜனாதிபதி அனுராவின் தேசிய மக்கள் சக்தி கட்சி எம்பி ஆவார். மாத்தரை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் சரோஜா சாவித்ரி பால்ராஜ் இருக்கிறார். இன்றைய பதவியேற்பின்போது சிங்களத்தில் இவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவருக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.



இரண்டாவது தமிழ் அமைச்சரான ராமலிங்கம் சந்திரசேகர். இவரும் தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எம்.பிதான். தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு எம்பி ஆனவர் இவர். இவர் இன்று தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். மீன்வளம் மற்றும்  கடலியல் துறை அமைச்சராக இவர் பொறுப்பேற்றுள்ளார். கடந்த நாடாளுமன்றத்திலும் கூட இவர் தேசியப் பட்டியலின் மூலமாகத்தான் எம்பி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சரவையில் மொத்தமே பிரதமரையும் சேர்த்து 2 பெண்களுக்கு மட்டும்தான் இடம் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!

news

தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!

news

ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்

news

77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

news

நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

news

தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

news

அதிரடி சரவெடி... மீண்டும் வேகமெடுத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்