டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 7வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். 3வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்துள்ளது. இது பிரதமர் மோடியின் 3வது அரசாகும். வாஜ்பாய் காலத்திற்குப் பிறகு அமைந்துள்ள முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுமாகும்.
புதிய அரசு அமைந்துள்ளதைத் தொடர்ந்து அந்த அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். தனிப்பட்ட முறையில் அவருக்கு இது 7வது மத்திய பட்ஜெட்டாகும்.
இந்த பட்ஜெட் 3வது மோடி அரசுக்கு முதல் பட்ஜெட் என்பதால் சலுகைகள் அதிகம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஒவ்வொரு மாநில அரசும் தங்களது மாநிலங்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளன. ஆனால் அத்தனையும் நிறைவேற்றப்படுமா என்று தெரியவில்லை. அதேபோல சமூகத்தின் ஒவ்வொரு தட்டு மக்களும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதில் எத்தனை நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
குறிப்பாக மாதச் சம்பளதாரர்கள், வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாகவே வைத்து வருகின்றனர். இந்த பட்ஜெட்டில் அது நடக்குமா என்ற ஊகத்தில் அவர்கள் உள்ளனர்.
காஸ் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள் விலை உயர்வு என பல்வேறு விலை உயர்வுகளும் சாமானிய மக்களை வாட்டி வதைத்துக் கொண்டுள்ளன. இதற்கு இந்த பட்ஜெட்டில் ஏதாவது நிவாரணம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் உள்ளதாக மாநில அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அது தொடர்பான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய ரயில் திட்டங்கள் தேவை என்ற கோரிக்கை இருந்து வருகிறது. அதேபோல பல திட்டங்கள் நீண்ட காலமாக இழுபறியாக உள்ளன. அவற்றுக்கும் ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இப்படி பல்வேறு தரப்பிலும் பல விதமான கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் உள்ளதால் இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்படி கொடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது கூடுதல் சிறப்பாகும்.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}