டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எச்.20 சாலையை அகலப்படுத்த ரூ.36.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மேட்டுக்கடை முத்தம்பாளையம் ரோடு அகலப்படுத்த ரூ. 6.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் எஸ்.எச்., 154 அகலப்படுத்த ரூ. 18.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், மேகளத்தூர் பத்தாளப்பேட்டை ரோடு அகலப்படுத்த ரூ.20.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவ்டடத்தில் தருமத்துப்பட்டி ஆடலூர்-தாண்டிக்குடி ரோடு அகலப்படுத்த ரூ.5.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிதி மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் பொருளாதாரச் செயல்பாடுகள் கணிசமாக அதிகரிக்கும். போக்குவரத்து திறனை மேம்படுத்துவதுடன், பயண நேரத்தையும் குறைக்கும். தமிழ்நாடு முழுவதும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
{{comments.comment}}