லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கொட்டும் மழையில் நடு ரோட்டில் சேர் போட்டு உட்கார்ந்த ஆசாமியை லாரி டிரைவர் ஒருவர் மோதி கீழே தள்ளி அவருக்கு மரண பயத்தைக் காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடிகாரர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. நாடு முழுவதும் இது பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அவர்களது குடும்பங்கள்தான் பாதிக்கப்படுகிறது என்றால் இப்போது பொதுமக்களுக்கும் இவர்கள் பெரும் தொல்லையாக மாறி வருகிறார்கள்.
குடித்து விட்டு நடு ரோட்டில் விழுந்து கிடப்பது, டான்ஸ் ஆடுவது, பஸ்களை வாகனங்களை மறித்து ரகளை செய்வது என்று இவர்களது அழிச்சாட்டியத்திற்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பிரதாப்கர் என்ற ஊரில்தான் இந்த கூத்து நடந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த ஒரு நபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மது போதையில் கொட்டும் மழையில் ஒரு சேரை எடுத்து வந்து நடு ரோட்டில் போட்டு மழையை ரசித்துக் கொண்டிருந்தார். இந்திப் பாடல்களைப் பாடியபடி ஜாலியாக என்னவோ நடு வீட்டில் உட்கார்ந்திருப்பதைப் போல அமர்ந்து கொண்டிருந்தார். அந்த சாலையில் ஏகப்பட்ட வாகனங்கள் போய்க் கொண்டிருந்தன. ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த லாரி டிரைவர் ஒருவர், குடிகார நபரைப் பார்த்து கடுப்பானார். சரியான பாடம் கற்றுக் கொடுக்க முடிவு செய்த அவர், அப்படியே லேசாக அந்த குடிகாரரின் சேரை இடித்தபடி லாரியை ஓட்டினார். இதில் சேர் விழுந்து அந்த குடிகார நபரும் சாலையில் உருண்டு விழுந்தார். லாரி நிற்கவில்லை. பேசாமல் போய் விட்டது.
கீழே விழுந்த குடிகாரர் கொஞ்சம் கூட பயப்படாமல், அப்படியே உட்கார்ந்து லாரியைப் பார்த்தபடி இருந்தார். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தந்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்த நபரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அவர் மன நலம் சரியில்லாதவர் என்று பின்னர் கூறப்பட்டது.
கடந்து வந்த பாதை!
மார்கழி பனித்துளி!
வைரத்தின் கனவு விவசாயியின் கையில்!
சோம்பேறி
கவலையில் மூழ்கிய கிராமங்கள்.. சோகத்தில் மக்கள்.. விமான நிலைய விசனங்கள்!
நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
எங்கள் வீட்டில் எல்லா நாளும்.. The Importance of Joint Family
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ
{{comments.comment}}