- வே.ஜெயந்தி
சித்திரை மாதம்
தமிழனின் புத்தாண்டு,
அனைவரும் ஒன்று கூடும்
அன்பு நிறைந்த விழா.
புத்தாண்டே வருக,
புன்னகையுடன் வாழ்த்திடு,
ஒவ்வொருவரின் வாழ்விலும்
புது பொலிவை தந்திடு.
போர்க்களம் இல்லாத உலகம்
அமைதியை தந்து விடு,
அன்பும் அமைதியும் நிறைந்த
நாட்களை பரிசளித்து விடு.

வாழ்க்கையின் தத்துவம்
சமையலில் தெரியும்;
இனிப்புக்கு சக்கரை பொங்கல்,
கசப்புக்கு வேப்பம்பூ ரசம்,
புளிப்புக்கு மாங்காய் பச்சடி,
துவர்ப்புக்கு வாழைப்பூ வடை,
உவர்ப்புக்கு உப்பு உருண்டை—
ஐவகை உணவு வகைகள்
சொல்லும் வாழ்வின் தத்துவம்.
கோலம் பூத்த வீதிகளில்
கொண்டாட்டம் மலரட்டும்,
குடும்பங்கள் இணைந்து
களிப்புடன் வாழட்டும்.
கனவுகள் எல்லாம் நனவாக
காலம் துணை நிற்கட்டும்,
கஷ்டங்கள் நீங்கி
களிப்புகள் பெருகட்டும்.
புது வருடம் வருகையால்
புதிய நம்பிக்கை பிறக்கட்டும்,
ஒவ்வொரு இதயத்திலும்
ஒளி நிறைந்த நாள்கள் உதிக்கட்டும்.
இயற்கை நமக்கு அளிக்கும்
இன்பத்தை உணர்த்தட்டும்,
இணக்கம் நிறைந்த வாழ்வு
என்றும் நிலைத்திருக்கட்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
{{comments.comment}}