சென்னை: மீண்டும் திமுக மேடையேறியுள்ளார் வைகைப் புயல் வடிவேலு. மீண்டும் அரசியல் பேசியுள்ளார். கடந்த முறை அவர் அரசியல் பேசியபோது அது திமுகவுக்கு பாதகமாக அமைந்தது. இந்த முறை அவரை வைத்து திமுக ஏதாவது திட்டம் போட்டுள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தத் தேர்தலில் அதிமுகவும் - தேமுதிகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்தக் கூட்டணி அமையாமல் தடுத்து தேமுதிகவை தன் பக்கம் இழுக்க திமுக தீவிரமாக முயன்றது. ஆனாலும் தேமுதிகவை தன் பக்கம் இழுத்து கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. தேமுதிக அமைத்த முதல் அரசியல் கூட்டணி இதுதான்.
அந்தத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் வடிவேலுவை மேடையேற்றியது திமுக. திமுக மேடையில் வடிவேலு பேசிய பேச்சுக்கள் யார் மறந்தாலும் தேமுதிகவினர் மறக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மிகக் கடுமையாக விஜயகாந்த்தை விமர்சித்துப் பேசியிருந்தார் வடிவேலு. மிக மிக காட்டமான விமர்சனங்களை, கேலி கிண்டலை வைத்துப் பேசியிருந்தார் வடிவேலு.
அவரது பேச்சு மிகப் பிரபலமானது, பலரும் அதைக் கேட்டனர். ஆனால் ரியாக்ஷன்தான் வேறு மாதிரியாக போய் விட்டது. அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். வடிவேலு சினிமாவை விட்டு பீல்ட் அவுட் ஆனார். நீண்ட காலம் அவரால் திரும்பி நடிக்கவே முடியவில்லை. பழைய வடிவேலுவும் அத்தோடு காணாமல் போனார். அன்று போன அந்த நகைச்சுவைப் புயல் வடிவேலுவை இன்று வரை ரசிகர்களால் பார்க்கவே முடியவில்லை. அவரது திரையுலக வாழ்க்கையே மொத்தமாக மாறிப் போனது. அதன் பிறகு அவர் பெரிய அளவில் நடிக்கவில்லை. நடித்தாலும் படங்கள் ஓடவில்லை.
இந்த நிலையில் மீண்டும் திமுக மேடையில் ஏறியுள்ளார் வடிவேலு. முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளையொட்டி சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வடிவேலு பேசினார். அப்போது மீண்டும் திமுகதான் வெல்லும். முதல்வராக மு.க.ஸ்டாலின்தான் பதவியேற்பார். 200 தொகுதிகளுக்கும் மேல் ஜெயிப்பார் ஸ்டாலின். எதிர்ப்புகளையெல்லாம் சிக்ஸராக அடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் மட்டும் இல்லாவிட்டால் தமிழுக்கு இன்னும் கேடு வந்திருக்கும். இவர் மட்டும் இல்லாவிட்டால் என்னாகும்.
மிகவும் திறமையான முதல்வர் மு.க.ஸ்டாலின். மிகவுநம் பொறுமையான முதல்வரும் கூட. அதே நேரத்தில் பொறுமைக்கும் அளவுக்கு இருக்கு. ஆனால் பொறுமையாக இருந்தாலும் கூட மக்களுக்கு என்ன செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருக்கிறார். அதுதான் அவரிடம் பிடித்தது.
என்னிடம் அமைச்சர் அரசியல்லாம் பேசாதண்ணே.. தலைவரை மட்டும் வாழ்த்துன்னு சொன்னார்.. தலைவரை வாழ்த்த முடியுமா.. அவர் மட்டுமல்ல, அவரது மகன், அவரது பேரன் எல்லோரும் வருவாங்க என்று பேசினார் வடிவேலு. வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திமுக மேடையில் அரசியல் பேசியது பலரையும் கவர்ந்துள்ளது. அதேசமயம், கடந்த 2011 தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது போல இந்த முறை பெரிதாக அரசியல் பேசவில்லை. மாறாக முதல்வர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினார். அதேபோல இந்தித் திணிப்பு குறித்தும் தனது பாணியில் எளிமையாக விளக்கி நறுக்கென்று கொட்டும் வைக்கத் தவறவில்லை வடிவேலு.
அதேசமயம், வருகிற சட்டசபைத் தேர்தலில் விஜய்க்கு இவரை களம் இறக்க ஆழம் பார்க்கிறதா திமுக என்று சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்து விட்டனர் பலர். வடிவேலு எப்படி விஜயகாந்ததுடன் மிக நெருக்கமாக பழகி நிறைய படங்களில் நடித்தாரோ அதேபோலத்தான் விஜய்யுடனும் மிக நெருக்கமான நட்பில் இருப்பவர். இருவரும் இணைந்த படங்கள் மிகப் பெரிய அளவில் ஹிட்டும் அடித்துள்ளன. இந்த நிலையில் விஜயகாந்த்துக்கு எதிராக திரும்பியது போல விஜய்க்கு எதிராகவும் வடிவேலு திரும்புவாரா என்று தெரியவில்லை.
More Rains On the way: மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் .. 2 நாட்களுக்கு.. மழை வெளுக்க போகுதாம்
அதிமுக பொதுச் செயலாளராக.. எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு.. எதிரான மனு தள்ளுபடி
Vijay gets ready for Tamil Nadu Tour: அரசியல் அதிரடிக்கு தயாராகும் விஜய்.. அடுத்த மூவ் இது தான்!
அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள், உட்கட்சி குழப்பம்.. பலம் இழக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி?
GST reforms: இதை வரவேற்கிறேன்.. ஆனால் எதற்காக இந்த திடீர் நடவடிக்கை.. ப.சிதம்பரம் கேள்வி
GST reforms: மக்கள் வாழ்க்கை மேம்படும்.. வர்த்தகம் எளிதாகும்.. பொருளாதாரம் வலுப்படும்.. பிரதமர் மோடி
40% வரி விதிப்புக்குள் வரும் Sin Goods.. காஸ்ட்லி கார்கள்.. சூப்பர் பைக்குகள்.. துப்பாக்கிகள்!
இந்தியா மீதான 50% வரியை எதிர்த்த உத்தரவு.. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் மேல்முறையீடு
விரைவில் நல்லது நடக்கும்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் எதை சொல்கிறார் தெரியுமா?
{{comments.comment}}