- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 20 26 மே மாதம் 30ஆம் தேதி சனிக்கிழமை வைகாசி விசாகம் அனுஷ்டிக்கப்படுகிறது. பண்டைய காலம் முதல் தமிழர்களின் தலைமை தெய்வமாக முருகப்பெருமான் வணங்கப்படுகிறார். முருகப்பெருமானை வழிபடுபவர்களில் தமிழர்கள் அதிகம் என்பதால் 'தமிழ் கடவுள்' என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
முருகன் வலிமை, தைரியம் மற்றும் ஞானத்தின் கடவுளாக வணங்கப்படுகிறார். அனைத்து கடவுள்களுக்கும் தளபதியாகவும்,போர் வீரர் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். 'முருகு 'என்ற சொல்லிற்கு அழகு,இளமை என்று பொருள்.ஆகவே,முருகன் என்றால் 'அழகன்' என்பது பொருளாகும்.
கந்த சஷ்டி,தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை போன்றவை முருகப்பெருமானை கொண்டாடும் விரத நாட்கள் ஆகும். அந்த வகையில் வைகாசி மாதம் விசாக நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடப்படும் முக்கிய விழா 'வைகாசி விசாகம் 'ஆகும். இந்த நன்னாளை " சோதிநாள்" என்றும் அழைக்கப்படுகிறது.
விரத முறை:

வைகாசி விசாகத்திற்கு விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வதனால் வேண்டுதல்கள் அனைத்தும் ஈடேறும். எனவே பக்தர்கள் 48, 21, 11, 6 நாட்கள் வைகாசி விசாகத்திற்கு விரதம் அனுஷ்டிப்பார்கள். 48 நாட்கள் விரதம் இருக்க இயலவில்லை எனில் 21 நாட்களும், அல்லது 11 நாட்களும், அல்லது 6 நாட்களும், அல்லது வைகாசி விசாகம் அன்று ஒரு நாள் மட்டும் விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு.
வைகாசி விசாகத்தின் முக்கியத்துவம்:
முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை,திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய தலங்களில் வைகாசி விசாக விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முருகன் கோவில்களில் மகா உற்சவம், முருகப்பெருமான் வள்ளி- தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இந்த நன்னாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும்.குடும்ப ஒற்றுமை பலப்படும். மகிழ்ச்சி நிலவும். எதிர்மறை சக்திகள் நீங்கும். சகல நன்மைகளும் கிட்டும்.
வழிபாடு:
முருகப்பெருமான் ஆலயங்களுக்கு பாதயாத்திரை யாக சென்று பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். சிலர் முருகப் பெருமானுக்கு காவடி எடுத்தும்,பால்குடம் எடுத்தும், அலகு குத்துதல்,பால் அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
இந்த நன்னாளில் பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து வழிபடும் குழந்தை பாக்கியம் கிடைக்க,வேண்டுதல் வைக்கும் பக்தர்களுக்கு கட்டாயம் முருகப்பெருமான் அருள் புரிவார்.
மௌன விரதம்:
சில பக்தர்கள் வைகாசி விசாக நன்னாளில் மௌனவிரதம் அனுஷ்டிப்பது வழக்கம். மௌன விரதம் இருந்து முருகனை மனதில் "ஓம் சரவணபவ" எனும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பர்.
அல்லது 108 முறை எழுதி வழிபடுவார்கள். மலை போல வந்த அனைத்து துன்பங்களையும், பனிபோல விலக்கிவிடுவார் முருகப் பெருமான் என்பது ஐதீகம்.
செய்யக்கூடாதவை:
எதிர்மறையான எண்ணங்களையோ அல்லது தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு செயல்களையும் இந்த நன்னாளில் செய்வதை தவிர்க்கவும்.யாரையும் கடுஞ்சொற்களால் திட்டவும் கூடாது. அடிக்கவும் கூடாது. அசைவம் உண்பதை தவிர்க்க வேண்டும்.
செய்ய வேண்டியவை :
வைகாசி விசாகம் தினத்தன்று அதிகாலையில் நீராடி, முருகப்பெருமான் படத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்கரித்து, சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், இனிப்பு, அப்பம்,தேன், பால்,பழம் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைத்து,தீபம் ஏற்றி, கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், வேல்மாறல்,கந்த குரு கவசம், குமாரஸ்தவம், கந்தர் அனுபூதி,கந்தர் அலங்காரம், போன்ற முருகப் பெருமானுக்கு உரிய பாடல்களை படிக்க வேண்டும்.
முழுமையாக விரதம் இருக்க இயலாதவர்கள் பால், பழம், இளநீர் அல்லது எளிமையான சைவ உணவுகளை உண்பது நன்மை பயக்கும்.
இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர்,மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட உலக நாடுகளிலும் உள்ள தமிழர்களால் வைகாசி விசாகம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
'யாமிருக்க பயமேன்' "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்."
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
ஐகோர்டில் வழக்காடு மொழியாக தமிழ்...முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு
தீபாவளி 2026: சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்!
கொள்ளை கொள்ளையாய் நல்ல பயன்கள் நல்கும் தாயே!
கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிரான வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி
Poem by Santhi Sinnathambi: மனசு!
விரைவில் புதிய தலைமை செயலகம் : 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
Teacher's day 2026.. ஆசிரியர் தினம்.. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்!
என் நாட்குறிப்பிலிருந்து.. நிழலாடிய குந்தவை நாச்சியார்.. மறக்க முடியாத தஞ்சை பயணம்!
உனக்கென வசந்தம் உன்மனமே.. எல்லாம் உன்வசமே....!
{{comments.comment}}