சென்னை: முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்த கவிப்பேரரசு வைரமுத்து, அமைச்சரவை மாற்றம் முதல் அரசியல் விமர்சனம் வரை சாதித்த முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் கவிதையையும் பதிவிட்டுள்ளார்.
திமுக பொறுப்பேற்றதிலிருந்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும், பல்வேறு சலுகைகளை வழங்கியும் வருகிறது. இது மட்டுமல்லாமல் அரசு பல்வேறு வரலாற்று சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறது. இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக பலரும் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சரவை மாற்றம் முதல் அரசியல் விமர்சனம் வரை சாதித்த முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்ததுள்ளார். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் ஒரு கவிதை தொகுப்பையும் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
இதுகுறித்து கூறியதாவது:
முகாம் அலுவலகத்தில்
மாண்புமிகு முதலமைச்சரை
மரியாதை நிமித்தமாகச்
சந்தித்தேன்
அவரது அண்மைக்காலத்
தொடர் வெற்றிகளுக்கு
வாழ்த்துச் சொன்னேன்
25 நிமிடங்கள்
உள்ளம் திறந்து
உரையாடினோம்
ஒரு நல்ல
உரையாடல் என்பது
நேர்த்தியான நெறிமுறைகள்
கொண்டது
ஒரே மாதிரியான ஈடுபாடு
இருவர்க்கும் வாய்க்க வேண்டும்
அறையின் கதவுகள் பூட்டப்பட்டு
இருதயத்தின் கதவுகள்
திறந்திருக்க வேண்டும்
ஒருவர் பேசிமுடித்து
முற்றுப்புள்ளி வைக்கும் வரையில்
அதை ஊடறுக்காத
உரையாடல் நாகரிகம் வேண்டும்
இந்த மூன்றும் உடையவர்
முதலமைச்சர்
அமெரிக்கா முதல்
அப்பல்லோ வரையில்
பிரதமர் முதல்
துணைமுதல்வர் வரையில்
அமைச்சரவை மாற்றம் முதல்
அரசியல் விமர்சனம் வரையில்
தாழ்ப்பாள் இல்லாத தமிழில்
பல்வேறு எண்ணங்கள்
பரிமாறிக்கொண்டோம்
ஓர் ஆட்சியாளனுக்குரிய
ஒரே ஒரு பெரும்பலம்
'உற்சாகம்'
அந்த உற்சாகம் குறையாமல்
உலா வாருங்கள் என்று
வாழ்த்தி விடைகொண்டேன்
முதலமைச்சர் வீட்டுக் காஃபியில்
நுரைகளுக்கு மேல்
தெளித்திருந்த டிகாஷன்
இன்னும்
நறுஞ்சுவையோடு
நாக்கில் இருக்கிறது என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}