சென்னை: பார்க்கப் பார்க்கப் பதற்றம் தருகிறது கேரளத்தின் நிலச்சரிவால் நேர்ந்த நெடுந்துயரம். அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை. பிணமாகிப் போனவர்களின் கடைசி நேரத் துடிப்பு என் உடலில் உணரப்படுகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
கனமழை காரணமாக வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 3 நாட்ளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முண்டக்கை ஆற்றை கடந்து செல்ல அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்த நிலையில், தற்பொழுது தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பாலம் வழியாக 2 ஜேசிபி வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
பார்க்கப் பார்க்கப்
பதற்றம் தருகிறது
கேரளத்தின் நிலச்சரிவால்
நேர்ந்த நெடுந்துயரம்
இருந்த வீடுகளே
இடுகாடுகளானதில்
இந்திய வரைபடத்திலிருந்தே
சில கிராமங்கள்
இல்லாமல் போய்விட்டன
அது ஜலசமாதியா
நிலச் சமாதியா என்று
சொல்லத் தெரியவில்லை
பிணமாகிப் போனவர்களின்
கடைசிநேரத் துடிப்பு
என் உடலில் உணரப்படுகிறது
மனிதனுக்கு எதிராக
இயற்கை போர்தொடுத்தது
என்றும் சொல்லலாம்
இயற்கைக்கு எதிராக
மனிதன் தொடுத்த போரின்
பின்விளைவு என்றும் சொல்லலாம்
மலைகளை மழித்தல்
காடுகளை அழித்தல்
நதிகளைக் கெடுத்தல்
எல்லாம் கூடி
மனிதர்களைப்
பழிவாங்கியிருக்கின்றன
புவி வெப்பத்தால்
பைத்தியம்பிடித்த வானிலை
இன்னும் இதுபோல்
செய்யக்கூடும்
மனிதர்களும் அரசுகளும்
விழிப்போடிருத்தல் வேண்டும்
மூச்சுக் குழாயில்
மண் விழுந்து
போனவர்க்கெல்லாம்
என் கண்விழுந்த கண்ணீரில்
அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
Malliga Selvaraj Poem: கோலங்கள்!
கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?
கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?
Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?
தாராபுரத்தில் நாளை முதல்வர் விஜய் ரோட்ஷோ: த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரம்
அன்பு எதையும் தாங்குமா?
தென்தமிழ் தலையங்கம்: ஆசியக் களத்தில் புது சகாப்தம்.. விளையாட்டு வல்லரசாக உருவெடுக்கும் இந்தியா!
தென்தமிழ் தலையங்கம்: காந்தியம் எங்கே?.. அகிம்சை மண்ணில் வளரும் வன்மம்!
Kerala Tour Diary: தூரத்தில் யானை தெரியுமா?.. கடவுளின் தேசம் அல்லவா!
{{comments.comment}}