- ஸ்வர்ணலட்சுமி
சைக்கிள் வாங்கி 4 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், அதனை ஓட்டிய பாடு இல்லை என்று சிறிது கோபத்துடன் வராண்டாவில் நிறுத்தி இருந்த சைக்கிளை பார்த்து தன் மனைவி மங்கையிடம் கூறிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தார் முருகேசன். தன்மகள் சுப்ரியா ஆசைப்பட்டு வாங்கி தரச் தரச் சொன்னாள் இந்த மிதிவண்டியை . அதுவும் சிகப்பு கலர் வேண்டும் என்று ஏழாம் வகுப்பு படிக்கும் போது அடம் பிடித்து வாங்கினாள், சுப்ரியா. பள்ளி விடுமுறையில் அதனை ஓட்டக் கற்றுக் கொண்டதோடு சரி. அது அழகாக வராண்டவில் நின்று கொண்டு இருக்கிறது. அவ்வப்போது சைக்கிள் டயருக்கு காற்று நிரப்பி வைப்பாள், பிறகு ஆயுத பூஜைக்கு நன்றாக துடைத்து விபூதி பட்டையிட்டு, குங்குமம் வைத்து பூ சொருகி வைப்பதோடு சரி. அவ்ளோதான்... சைக்கிள் ஆசை என்று முருகேசன் ஹாலில் வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டு தண்ணீர் பருகி விட்டு சலிப்புடன் கூறினார்.
சுப்ரியா மௌனமாக இருந்தாள் .அப்பா கூறியது அவளுக்கு புரிகிறது ஆனால் தன்னை வளர்த்த தாயின் ஆசைக்கும் ,அன்புக்கும் முன்னாள் சுப்ரியா ஆசை ஒன்றும் பெரியது இல்லை என்பதை எப்படி புரிய வைப்பது என்று மனதில் போராடினாள். அவள் வளர்ப்புத் தாய் லட்சுமி அம்மாள்.
வளர்ப்புத் தாய்க்கும், சைக்கிளுக்கும் என்ன சம்பந்தம்?....
சுப்ரியாவை அன்புடனும், அக்கறையுடனும், பாசத்துடனும், அரவணைப்போடு வளர்த்தவர் லட்சுமி அம்மாள். அவள் மழலையர் பள்ளி எல்கேஜி சென்ற நாள் முதல் இப்போது பத்தாம் வகுப்பு படிக்கிறாள் அதுவரை ஒரு நாளைக்கு ஆறு தடவை பள்ளிக்கு காலை 8:30 மணிக்கு சுப்ரியாவின் ஸ்கூல் பேக் தூக்கிக்கொண்டு ஸ்கூலில் விட்டு விட்டு வீடு திரும்புவார் நடக்கும் தொலைவு தான்.
பிறகு மதியம் 12:50 மணிக்கு மங்கை சமைத்து தரும் உணவை லஞ்ச் பாக்ஸில் எடுத்துக் கொண்டு பள்ளி மரத்தடியில் வந்து லட்சுமி அம்மாள் உட்காரா ஒரு மணி லஞ்ச் பெல் அடிக்க சரியாக இருக்கும் .லஞ்ச் பெல் அடிக்க தவறினாலும் லட்சுமி அம்மாள் வரும் நேரம் மட்டும் தவறாது. பிரியாவின் பிரண்ட்ஸ் அனைவரும் என்னப்பா இன்னும் லஞ்சு பெல் அடிக்கவில்லை என்று பசியோடு ஒருவருக்கொருவர் கிசுகிசுப்பர் .ஏனெனில் சுப்ரியாவின் பாட்டி லஞ்ச் பேக் உடன் வந்துவிட்டார். ஒரு மணி ஆகிவிட்டது, இன்னும் லஞ்ச் பெல் அடிக்கவில்லை பாரேன்... என்பார்கள் .அவ்வளவு நேரம் தவறாதவர் லட்சுமி அம்மாள்.
லட்சுமி அம்மாவை சுற்றி சுப்ரியா தோழிகளுடன் மரத்தடியில் பேசிக் கொண்டும் ,ஜோக் செய்து கொண்டும் ,சந்தோஷமாக மதிய உணவு உண்பாள். அவள் சூடான சாப்பாடு தான் சாப்பிடுவாள் . அதிலும் மிச்சம் வைத்து விடுவாள். லட்சுமி அம்மாள் உண்டு பிறகு வீடு திரும்புவார். அதேபோல் மாலை 4 மணிக்கு ஸ்கூல் விடும் நேரத்திற்கு 10 நிமிடம் முன்பு லட்சுமி அம்மாள் அதே மரத்தடியில் காத்துக் கொண்டு இருப்பார். சுப்ரியா அம்மா ....என்று கூவிக்கொண்டே லக்ஷ்மி அம்மாவை கட்டி தழுவிக்கொண்டு முத்தமிடுவாள் .பிறகு சுப்ரியாவின் ஸ்கூல் பேக்கை லட்சுமி அம்மாள் தான் சுமந்து வருவார். அது அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சியான வேலை. ஆனால் இத்தனை பாரமாக உள்ளது என் பேக் அம்மா கொடுங்கள் நான் எடுத்து வருகிறேன் என்றாலும் உடனே லட்சுமி அம்மாள் வேண்டாம் கண்ணே உனக்கு கை வலிக்கும் என் தங்கமே... என் இளவரசி நீ ..என்பார்.
பிரியா கண்களில் நீர் தழும்பி லக்ஷ்மி அம்மாவை கட்டி அணைத்துக் கொள்வாள். இப்படியே எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு நாள் கூட தவறாமல் இவ்வாறு நடக்கும். இதற்காகவே சைக்கிளை சுப்ரியா ஆசையாக வாங்கியும் ஓட்டாமல் இருப்பாள் .ஸ்கூலுக்கு சைக்கிளில் செல்கிறேன் என்றாலே லக்ஷ்மி அம்மாள் இரண்டு நாட்கள் அழுவார் . (லட்சுமி அம்மாள் முருகேசன் வீட்டிற்கு கணவருடன் வாடகைக்கு வந்தவர் ,அவர் கணவர் இறந்தவுடன் முருகேசன் வீட்டிலேயே சுப்ரியா பிறந்ததிலிருந்து அந்த வீட்டோடு இருந்துவிட்டார் ) சுப்ரியாவை கண்ணுக்கு கண்ணாக வளர்ப்பார். அவள் பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மூன்றாவது இடம் பெற்று அதிக மார்க் வாங்கினாள். லட்சுமி அம்மாள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தன்னை பெற்றவர்கள் அடைந்த சந்தோஷத்தை விட வளர்த்த தாய் லட்சுமி அம்மாவின் சந்தோஷமும், மகிழ்ச்சியும் தான் சுப்ரியாவிற்கு பெரியதாக இருந்தது .வீட்டிற்கு வந்த அவள் ஆசை சைக்கிளில் அமர்ந்து பெல் அடித்து அம்மா அடுத்த வருடம் இதேபோல் உன்னுடனே நடந்து வருகிறேன்.
ஆனால், அதில் ஒரு மாற்றம் நான் என் சைக்கிளில் என் ஸ்கூல் பேக் வைத்துக்கொண்டு தள்ளிக்கொண்டு நாம் இருவரும் செல்லலாம், ஏனெனில் பெரிய வகுப்பு சென்றால் நிறைய புத்தகம் நோட்டு என்று இருக்கும் அம்மா பேக் மிகவும் பாரமாக இருக்கும் ,அம்மா... என்று ,கெஞ்சி... கொஞ்சுவாள் சுப்ரியா. லட்சுமி அம்மாவும், அவளும் தினமும் சைக்கிளை தள்ளிக்கொண்டே பள்ளிக்குச் செல்வர். இத்தனை அன்பு ஒரு வளர்ப்பு தாய் செலுத்த முடியுமா ? இதில் சுப்ரியா அதிர்ஷ்டசாலி தானே!
சிறிது வருடம் கழித்து லட்சுமி அம்மாள் இறந்து விட்டார் . யாரிடம் அதிக அன்பு செலுத்துகிறோமோ அவர்கள் நம்மை விட்டு பிரிந்து விடுவார் போல... அவரிடம் இருந்து சுப்ரியா கற்றுக் கொண்டது தன்னலம் இல்லாத அன்பு. இந்த காலத்தில் இது சாத்தியமா?.. லட்சுமி அம்மாவைப் போல் அனைவரிடமும் அன்பு செலுத்தலாம் ,என்று முடிவெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் இன்றும் சுப்ரியா.
உங்களுக்கு கதை பிடித்துள்ளதா.. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
இந்தியாவின் 15 நகரங்களை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. அதிரடியாக முறியடித்த ராணுவம்!
அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிக்கப்பட இது தான் காரணமா?
Rain forecast: தமிழ்நாடு முழுவதும்.. அடுத்த சில நாட்களுக்கு மழை இருக்கு.. என்ஜாய்!
ஜெயிலர் 2: ரஜினிகாந்துடன் மோகன்லால் மீண்டும் இணைவாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
வெளுக்குது வெயிலு.. ஏசி யூஸ் பண்றீங்களா.. அப்ப இதையெல்லாம் மறக்காம பாலோ பண்ணுங்க!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக.. ரோஹித் ஷர்மா திடீரென ஓய்வை அறிவித்தது ஏன்?
உங்களுக்கு bp இருக்கா?.. தயவு செய்து இந்த 5 உணவுகளை மறந்தும் எடுத்துக்காதீங்க!
ரெட்ரோ ரூ.100 கோடி வசூல்.. சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணிக்கு..அமோக வரவேற்பு..!
கதையல்ல நிஜம்.. வளர்ப்புத் தாயும், சைக்கிளும்!
{{comments.comment}}