New year 2025.. டிசம்பர் 31ம் தேதி வண்டலூர் ஜூவுக்கு ஜாலியா போய்ட்டு வாங்க.. லீவு கிடையாது!

Dec 28, 2024,06:49 PM IST

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.


நாட்டிலேயே மிகப் பழமையான மற்றும் பெரிய பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்கிறது. இதன் பெயர் அண்ணா உயிரியல் பூங்கா ஆகும். நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்கா என்ற விருதையும் இது பெற்றுள்ளது நினைவிருக்கலாம். வண்டலூரில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட  விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அரிய வகை பறவைகள் மற்றும் அழிந்து வரும் விலங்கினங்களும் உள்ளன.




இந்த பூங்காவில் குழந்தைகள் பார்க், இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகளின் இருப்பிடம்,  மீன்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா கண்காட்சியகம் போன்றவை தனித்தனியாக அமைய பெற்றுள்ளன. இதனை கண்டு ரசிப்பதற்காக தினசரி 2000 முதல் 3000 வரை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகின்றனர். 


பூங்காவை குடும்பத்துடன் சுற்றிப் பார்க்க பேட்டரி வாகன வசதிகளும் உள்ளன. இந்த பூங்காவை சுற்றி பார்க்க நபருக்கு ரூபாய் 200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


வண்டலூர் பூங்காவுக்கு  வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாக இருக்கும் நிலையில், புத்தண்டுக்கு முதல் நாள் அதாவது டிசம்பர் 31 பூங்கா திறந்திருக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது.  ஆனால் அன்றைய தினம் பூங்கா செயல்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. 


தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டும் செவ்வாய்கிழமை டிசம்பர்  31ஆம் தேதி அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான நேரத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பிறகென்னப்பா.. புளியோதரையுடன் கிளம்பிப் போய் புலி சிங்கத்தைப் பார்த்து மகிழ்ந்துட்டு வாங்க!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோவை முடக்கிய மெட்டா.. மன்னிப்பு கேட்டது!

news

பழனியை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்திலும் முறைகேடு.. தீவிர விசாரணை

news

அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…

news

ஜென் Z போராட்டக்காரர்கள் மாபெரும் சாக்கடைகள்.. கங்கனா ரணாவத் கருத்தால் பெரும் சர்ச்சை

news

ஜார்ஜ் பெர்னாட் ஷா.. இலக்கியத்தையும் சமூக சிந்தனையையும் இணைத்த அபூர்வ படைப்பாளி!

news

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

news

சீனாவின் அடாவடி.. இந்திய எல்லை அருகே அதிநவீன J-20 போர் விமானங்களை குவித்து அக்கிரமம்!

news

இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

news

An Empty Wallet.. காலியான பணப்பை!

அதிகம் பார்க்கும் செய்திகள்