"காவி கிடையாது".. வாரணாசி வந்தே பாரத் ரயிலுக்கு "பழைய யூனிபார்மையே" மாட்டி விட்ட ரயில்வே!

Dec 19, 2023,09:03 AM IST

வாரணாசி: வாரணாசி - புது டெல்லி இடையிலான 2வது வந்தே பாரத் ரயில் காவி நிறத்தில் இருப்பது போல புகைப்படங்களை வெளியிட்டிருந்த இந்திய ரயில்வே, கடைசியில் என்ன நினைத்ததோ, பழைய வந்தே பாரத் ரயில் போலவே நீல, வெள்ளை நிற ரயிலேயே அங்கு இயக்கத் தொடங்கியுள்ளது.


டெல்லி, வாரணாசி இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் ரயில் உள்ளது. இந்த நிலையில் 2வது வந்தே பாரத் ரயிலை நேற்று அறிமுகப்படுத்தியது. இதை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வாரணாசி தொகுதியின் எம்.பியாகவும் பிரதமர் மோடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இந்த 2வது வந்தே பாரத் ரயில் குறித்த புகைப்படங்களை முன்பு வெளியிட்டிருந்தது ரயில்வே.  பத்திரிகையாளர்களுக்கு அனுப்பப்பட்ட அந்த பிரவுச்சர்களில், ரயிலின் நிறம் வழக்கமான  வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இல்லாமல் காவி மற்றும் கிரே நிறத்தில் இருந்தது. இது விவாதங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பியது.




ஆனால் நேற்று அறிமுகமான ரயில் வழக்கமான நிறத்திலேயே இருந்தது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் விளக்கம் அளிக்கையில், வந்தே பாரத் ரயில்களின் நிறத்தை காவி மற்றும் கிரே நிறத்தில் மாற்றும் திட்டம் உள்ளது. அந்தப் பெட்டிகள் இன்னும்  முழுமையாக தயாராகவில்லை. பெட்டிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. எனவேதான் வழக்கமான நிறத்திலான பெட்டிகள் தற்போது இயக்கப்படுகின்றன என்று விளக்கினார்.


ஏற்கனவே காசர்கோடு - திருவனந்தபுரம் இடையே கடந்த செப்டம்பர் 24ம் தேதி ஒரு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ரயில் காவி மற்றும் கிரே நிறத்திலான  பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறத்தையே அனைத்து ரயில்களுக்கும் அமல்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஆனால் இது காவியைப் புகுத்தும்  திட்டம் என்று பலரும் விமர்சித்து வருவது நினைவிருக்கலாம்.


அப்போது இதுகுறித்து தெளிவுபடுத்திய, ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்தான் மனித கண்களுக்கு தெளிவாகத் தெரியக் கூடியதாகும். ஐரோப்பிய நாடுகளில் 80 சதவீத ரயில்கள் ஆரஞ்சு, மஞ்சள் காம்பினேஷனில்தான் இருக்கும் என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2வது வாரணாசி - டெல்லி வந்தே பாரத் ரயிலானது, செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும். வாரணாசியிலிருந்து காலை 6 மணிக்குக் கிளம்பி பிற்பகல் 2.05 மணிக்கு டெல்லியை சென்றடையும். மறுமார்க்கத்தில் 3 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டு இரவு 11.05 மணிக்கு வாரணாசியை சென்று சேரும்.


முதல் வந்தே பாரத் ரயில் டெல்லியிலிருந்து காலை 6 மணிக்குக் கிளம்பி, பிற்பகல் 2 மணிக்கு வாரணாசி வந்து சேரும். மறுமார்க்கத்தில் 3 மணிக்கு வாரணாசியிலிருந்து புறப்பட்டு  இரவு 11 மணிக்கு டெல்லி போய்ச் சேரும். இந்த ரயிலானது, வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

அதிகம் பார்க்கும் செய்திகள்