வேங்கைவயல் வழக்கு.. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகளா.. திருமாவளவன் அதிர்ச்சி

Jan 24, 2025,07:43 PM IST

சென்னை: வேங்கைவயல் வழக்கில் காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே குற்றவாளிகள் என்று தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை:


வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது; மேல்விசாரணைக்கு  ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 




வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ. டி சார்பில் இன்று பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை. 

எனவே, சி பி சி ஐ டி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். 


வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. 


உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை. தற்போது  இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் , சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.


உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சி பி சி ஐ டி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CM VIjay to visit Karur: முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?

news

ஜூலை 15ல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: இந்திய கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

"எம்எல்ஏ.,க்களை வாங்குவதில் மட்டும் கவனம்..." அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

news

ரூ.2000 நோட்டுக்கள் வைத்திருந்தால் மாற்றிக் கொள்ளலாம் : ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு

news

அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் அதிரடி பதிலடி: அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல்!

news

ADMK Ex MLAs: ராஜினாமா ஏன்? சபாநாயகரிடம் 3 முன்னாள் எம்எல்ஏ.,க்கள் நேரில் விளக்கம்

news

மகளிர் விடியல் பயணம் திட்டம் பெயர் மாற்றம்...அரசு பஸ்களில் விடியல் நீக்கம்

news

அமைச்சர் மரியா வில்சன் புதுச்சேரி கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்